உள்ளடக்கத்துக்குச் செல்

வைகையும் வால்காவும்/பெரும் பெயர்

விக்கிமூலம் இலிருந்து

பெரும் பெயர்


பிரித்தலும் பேணிக் கொளலும், பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல அமைச்சு -திராஃகியைத்
தள்ளித் திறமையரைச் சேர்த்துச் செருமனியை
உள்ளி உவந்தான் லெனின். 61

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து எனும்-சொல்ஒப்ப
வெற்றிக்கு வித்தாகும் உண்மை மொழியன்றிக்
கற்பனைச்சொல் காட்டான் லெனின். 62

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும் ஆல்-மனநலஞ்சேர்
மக்கள் வறுமையை மாய்த்துப் பொதுவுடைமை
தக்கதெனச் சார்ந்தான் லெனின். 63

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின் என-எண்ணி
அருஞ்செயல் செய்தான்! அரசுமக்கட் காக்கிப்
பெரும்பெயர் பெற்றான் லெனின். 64