உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நாடெங்கும் புகழ் : எல்லோருக்கும் திருப்தி 99 போட்டிபோட்டு, வாயில்லாப் பிராணிகளாகிய வாழைப்பழம், வடை, போளி முதலிய பண்டங்களை பகாசுரன், பீமசேனன் இவர்களைப் போல் துவம்சம் செய்ததையும், அனுமார் யுத்தக்களத்தில் ராட்சதர் களைக் கலக்கியது போல போஜன காலத்தில் கையில் அகப்பட்டதை யெல்லாம் கசக்கிச் சின்னாபின்னம் பண்ணிப் போன இடம் தெரியாமல் செய்து அட்ட காசம் செய்பவர்கள் போல, ஏப்பம் விட்டு கர்ச்சித்த தையும், சாப்பிட்ட சிரமந்தீர, மணலில் கிடந்து புர ளும் மதயானைகளைப் போலப் புரண்டதையும், முத்து ஸ்வாமி அய்யர் இவர்களுடைய வயிறுகளாகிய ஓம் குண்டங்களைச் சலியாது சந்தோஷமாய் வளர்த்ததை யும் இன்னும் அந்தப் பிரதேசம் முழுவதும் கதை கதையாகச் சொல்லுகிறார்கள். இவ்விதமாக எல்லா வித ஜனங்களையும் திருப்தி செய்த முத்துஸ்வாமி அய் யர் , ராஜசூய யாகம் செய்து கிடைப்பதற்கரிய 'சம் ராட்' என்ற பட்டம் பெற்றுச் சிறப்புற்றிருந்த தரும புத்திர மகாராஜாவைப் போல் விளங்கினார். சந்திர னுடைய கிரணங்கள் நாலா பக்கமும் பரந்து ஏழை, பணக்காரன், பாலன், விருத்தன், பிராமணன், சூத்தி ரன், ஸ்திரீ, புருஷன் முதலிய எல்லோருடைய உள் ளத்தையும் பட்சபாதமின்றி குளிரச் செய்வது போல முத்துஸ்வாமி அய்யருடைய தர்மமும் கீர்த்தியும் எங் கும் பரந்து எல்லோரையும் சந்தோஷிப்பித்தன.