188 கமலாம்பாள் சரித்திரம் டாமரையின் மலர் பூத்த தொத்த தவ்வாழிவெண் திங்கள்' என்றபடி தாமரைப் புஷ்பம்போல் விளங் கும் சந்திரனுடைய மெல்லிய ஒளி கடலிற்பரவிற்று. ஸ்ரீநிவாசன்,-' சந்திரன் வந்துவிட்டானாம், சமுத் திரம் முகமலர்ந்து சந்தோஷத்தால் புன்சிரிப்புச் செய் கிறது, ஆஹா பேஷ்!" லட்சுமி.- 'ஏன் அதற்கு அவ்வளவு சந்தோஷம் சொல்லுங்கள்?' ஸ்ரீநி. - சந்திரன் விருந்தோ இல்லையோ அது தான்.' ல.--'அப்படியில்லை "கலந்தவர்க்கு இனியதோர் கள்ளுமாய்" என்று சொல்லியிருக்கிறதல்லவோ. ஸ்திரீ புருஷர்கள் அன்பாய் இருந்தால் அவர்களுக்கு சந்திரன் அமிர்தபானம் போலே-' ஸ்ரீநி.- ' யார் புருஷன் யார் பெண்டாட்டி !' ல.- சொல்லட்டுமா, இருங்கள் சொல்கிறேன், இந்த சமுத்திரந்தான் போய் பெண்டாட்டி ; இளந் தென்றல் இருக்கிறதல்லவோ ---' ஸ்ரீநி.--'ஆமாம் இருக்கிறது, அதற்கென்ன பண்ண வேண்டுமென்கிறாய். அது அப்படித்தான் இருக்கும்! நீ என்ன சொல்லுகிறது!' ல.- 'போங்கள், நீங்கள் கேலிபண்ணுகிறீர்கள், நான் பேசவில்லை, போங்கள்.' ஸ்ரீநி.-' இல்லையடியம்மா சொல்லு; சே, கோபித் துக்கொள்ளாதே.' ல. - (ஸ்ரீநிவாசனுக்கு ஒரு முத்தம் கொடுத்து) இளந்தென்றல் தான் சீமாவாம் ; (ஸ்ரீநிவாசனாம்:)