விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 6
1931-ம் வருஷம் ஆங்கிலேய அரசாங்கம் இந்திய அரசியல்வாதிகளை இஷ்டம் போல் சிறைகளுக்குள் தள்ளிப் பூட்டி வைத்தது.
அந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் நாள் மாலையில் தான் போலீசார் முதன் முறையாக ஆனந்த பவனத்தில் அடி எடுத்து வைத்தார்கள். வீட்டைச் சோதனை போட்டார்கள். மோதிலாலையும் ஜவாஹரையும் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.
அதற்குப் பிறகு போலீஸாரின் திடீர் வருகையும் பரிசோதனைகளும் அடிக்கடி நேரிடும் நிகழ்ச்சிகள் ஆகி விட்டன. தந்தையும் மகனும், நாடாறு மாதம் காடாறு மாதம்' என்பது போல, வீட்டில் கொஞ்ச நாள் ஜெயிலில் ரொம்ப காலம் என்ற தன்மையில் வாழ நேரிட்டது.
விஜயலக்ஷ்மி தன் கருத்துக்கு இசைந்த கணவன் ரஞ்சித் பண்டிட்டுடன் இல்வாழ்க்கையை இனிது நடத்திவந்தாள். கவிதாரசனையும், அழகிய இடங்களில் சுற்றும்ஆர்வமும் அவ்விருவருக்கும் இயல்பாக அமைந்திருந்தன.கல்யாணமானதிலிருந்தே அவர்கள் மன உல்லாசத்துக்காகவும் ஒய்வு நாடியும் ஐரோப்பாவில் யாத்திரை செய்யவேண்டும் என்ற ஆசையை வளர்த்து வந்தனர். ஆனாலும் அந்த என்னம்செயலாகக் கணிவதற்குச் சில வருஷங்கள் பிடித்தது.
1926ம்வருஷம் மார்ச்மாத ஆரம்பத்தில் ஜவஹர்லால் நேருவும் அவர் மனைவி கமலாவும், குழந்தை இந்திராவுடன் ஐரோப்பியயாத்திரைதொடங்கினர். பல மாதங்களாகவே கமலா நேரு நோயினால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவளது சிகிச்சைக்காக ஸ்விட்ஸர்லாந்து செல்லவேண்டியது அவசியமாயிற்று.
பம்பாயிலிருந்து வேனிஸ் நகருக்கு அவர்கள் கப்பல் பிரயாணம் கிளம்பியபோது விஜயலட்சுமியும் அவர் கணவர் ரஞ்சித் பண்டிட்டும் உடன் சென்றனர்.
ஜவாஹர்லால் நேரு ஐரோப்பாவில் பல மாதங்கள் தங்க நேர்ந்தது. விஜயலக்ஷ்மியும் ரஞ்சித பண்டிட்டும் கொஞ்ச காலம் அங்கு தங்கி, பல காடுகளிலும் யாத்திரை செய்து, நல்ல அனுபவம் பெற்று இந்தியா திரும்பினர். குடும்பத்திலும், நாட்டிலும் நிகழ்ந்து வந்த மாறுதல்கள் விஜயலக்ஷ்மியின் உள்ளத்திலும் கிளர்ச்சி ஏற்படுத்தி வந்தன. சகோதரனின் தீவிரமும், தங்தையின் செயல்களும் அவள் இதயத்திலே தேசீயக் கனலைக் கொழுந்து விட்டு எரியத் துாண்டின. சாந்திஜீயின் ஒளி அவளையும் இழுத்தது. வாழ்க்கையில் எதிர்ப்பட்ட எல்லா மாறுதல்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள் அவள்.
வெகுகாலம் வரை விஜயலக்ஷ்மி ஆங்கிலேய மோஸ்தரிலேயே ஆடைகள் அணிந்து பழகியவள். பிறகு மென்மையான பட்டாடைகள் கட்டி உல்லாச வாழ்வு வாழ்ந்தவள் . தேசிய உணர்வு ஏற்பட்டதும் கதருடையை உள்ளத்து உவகையுடன் ஏற்றுக் கொண்டாள். அக்காலத்தில் 'கதர்ப்பட்டு' என்று செல்லப் பெற்ற விலை உயர்ந்த துணிகூட மிகவும் கரடுமுரடாகவும் கனமுள்ளதாகவும் தான் இருந்தது. அத்துணியைக் கட்டிப் பழக்கம் படிகிற வரை. நேரு குடும்பத்தினர் வெகு சிரமம் அனுபவிக்கத்தான் செய்தனர்.
இத்தகைய மகத்தான மாறுதல்களை எல்லாம் மோதிலாலின் மனைவி ராணி நேரு பொறுமையுடனும் புன்னகையுடனும் சகித்து வந்தாள். பாரதப் பெண்மையின் பரிபூரண பிம்பம் அவள்.கணவன் காட்டிய வழியே தனது வாழ்வு என மதித்து, தன் இதய உணர்ச் சிகளையும் எண்ணத் துடிப்புகளையும் தனது உள்௧ளத்தினுள்ளேயே ஒடுக்கிவிடும் பண்பு பெற்ற உத்தமி அவள். கால வேகம் ஏற்படுத்திய எத்தனேயோ மாற்றங்கள் அவளுக்கு உகந்தனவாகத் தோன்றவில்லை. நாகரிகம் வளர்த்து விட்ட பல பண்புகள் அவளுக்கு திருப்தி தரவில்லை தான். தனது பெண்கள் தலைமுடியைக் குட்டையாகக் கத்தரித்துக் கொண்டு திரிந்ததும், கையில்லாத ரவிக்கை அணிந்து காட்சி அளித்ததும் அவளுக்குப் பிடிக்கவில்லைதான். ஆனாலும் அவள் வாய்திறந்து தனது ஆட்சேபணைகளைச் சொன்னதில்லை.
ராணி நேருவின் அக்காள் ஒருத்தி அவர்கள் குடும்பத்திலேயே வாழ்ந்து , வந்தாள். எல்லோரும் அவளை 'பீபீ அம்மா' என்றே அழைப்பது வழக்கம். அவளுக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும் போதே மணலினை முடிந்திருந்தது. பதினாறு வயதான போது அவள் கணவன் வீடு அடைந்தாள். ஒரு சில மாதங்களிலேயே கணவனை பறிகொடுத்தாள் . நீந்திக் களித்து நீராட போன இளைஞனை மரணம் கொத்திக்கொண்டு போய்விட்டது. அவளுக்கு 'பால்ய விதவை'என்ற அந்தஸ்த்து வந்து சேர்ந்தது. அன்று முதல் அவள் வாழ்வின் கொடுமைகளைச் சகித்து வந்தாள் . வாழ்க்கைத் தணலிலே தன்னையே புடம் போட்டு மாண்புற்ற மாசிலாத் தங்கம் அவள். நேரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவளிடம் பேரன்பு உண்டு. தங்கை ராணியிடம்'பீபி அம்மா'வுக்கு அபாரப் பிரியமும் பற்றுதலும் உண்டு அவளது குழந்தைகளிடம் பெரியம்மாவுக்குக் 'கொள்ளை ஆசை'.
விஜயலக்ஷ்மிக்கும் கிருஷ்ணாவுக்கும் எத்தனையோ கதைகள் சொல்லி உள்ளத்தைப் பண்படுத்திய பெருமை பீபி அம்மாவுக்கு உண்டு. மோகினிக் கதைகள், தெய்வக் கதைகள், வீரர்களைப் பற்றிய கதைகள், இந்தியாவின் வீரநாயகர்கள் விராங்கன்கள் பற்றிய கதைகள் பலவற்றையும் சொல்லி, குமரியர் உள்ளத்தில் வீர உணர்வைப் பயிரிட்டிருந்தாள் அவள். ராணி நேருவை விட, பத்து வயது மூத்தவள் பீபி அம்மா. 'பழங்காலத்து மனுஷி'. ஆகவே, புதுமைப் பெண்களின் போக்கு அவளுக்கு மனக்கஷ்டம் கொடுத்ததில் வியப்பில்லை. விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் புதுமை மோகம் அதிகம் கொள்ளாமல், புராதன தர்மங்களை அனுஷ்டித்திருக்கலாம் என்று பீபி அம்மாவும், ராணி நேருவும் அடிக்கடி ஆசைப்பட்டது உண்டு. ஆனால் கால ஓட்டத்தின் முன்னே அவர்கள் எண்ணம் ஓங்கி நிற்க முடியுமா என்ன! காலவேகம் ராணி நேருவை மகத்தான வீரநாயகியாக மாற்றிவிடும் வல்லமை பெற்றிருந்தது. அதைக் கண்டு அவளது கணவரும், மைந்தனும், பெண்களும் வியக்க வேண்டியதாயிற்று.
இவ்வித வீரத் தாய்மார்களிடையே வளர்ந்து உளப்பண்பு பெற்ற விஜயலக்ஷ்மியும் காலத்தின் அழைப்பை ஏற்று, தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பங்கு கொள்ள முன்வந்தது இயல்பு தானே ?