12
ஆகவே நடிகர்களின் நடை, உடை, நடிப்பு, வேடம், கதை, காட்சி அனைத்தும் பொய்; நிலையற்றவை. நாடகம் முடிந்ததும், அவை அனைத்தும் அழிந்து ஒழிந்து ஒன்றுமே யில்லாமற் போய்விடும். அது போலவே உனது செல்வத்தின் தோற்றமும் இருப்பும் அழிவும் என்பதை வற்புறுத்தவே இக்குறள் தோன்றியிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.
செல்வம் வருகின்ற வேகத்தைவிட அது அழிகின்ற வேகம் அதிகமாக இருக்கும் என்பது கலைஞர்களைப் பொறுத்தவரையில் 100க்கு 95 பங்கு உண்மையாக இருக்கும் என்பதை எண்ணியே, வள்ளுவர் கூத்தாட்டு அவையை, குழுவை, உவமையாகக் கொண்டாரோ? என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.
செல்வம் நிலையாது! அது என்றும் உன்னிடம் நிலைத்துநிற்கும் என்றெண்ணி ஏமாற்றம் அடையாதே. கூத்து நடைபெறும் அவையில் கூடிக்கலையும் குழுவினரைப்போல ஒருநாள் அது உன்னைவிட்டு ஒழிந்து போய்விடும். ஆதலின் அறஞ்செய். அது நல்லது! என்பது இக்குறளின் திரண்ட கருத்து.
சிலப்பதிகாரத்தின் காலத்திற்கு முன்னுள்ள வள்ளுவர் காலத்திலும் நாடகக்கலை இருந்து வந்திருக்கிறது. நாடகங்கள் பல வள்ளுவர் காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. நாடகம் பார்ப்பதில் வள்ளுவருக்கும் விருப்பம் உண்டு. நாடகத்தையும் கண்டு களித்திருக்கிறார். அதுவும் எல்லோருக்கும் முன்னே சென்று அமர்ந்து பார்த்திருக்கின்றார். முன்புறத்தில் மட்டுமல்ல; பின் புறத்திலும் திரும்பிப் பார்த்து கூட்டத்தின் பெருக்கைக் கணக்கிட்டு மகிழ்ந்திருக்கிறார். நாடகம் முடிந்தபிறகு நெருக்கடியில் அகப்படாமல் இருந்து கடைசியாகவே