44
சொல், செய்“ என்பன. இதில் எண்ணத்தை உண்டாக்கிச் செயலை வளர்க்கும் ஆ ற் ற ல் ”சொல்"லுக்கே உண்டு. அச்சொல் இடையிலிருந்தாலும் இக்குறளின் இறுதியில் நின்று ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
சொற்களைச் சொல்வதிலும் நல்ல சொற்களைத் தேடி இனிமை கலந்து சொல்லவேண்டும் என்பது இக்குறளின் முடிந்த முடிபு.
“இனிய சொலின்” என்ற இரு சொற்கள் இக்குறளின் ஈற்றடியின் இறுதியில் வந்துள்ளன. “இனிய சொற்களைச் சொன்னால்” என்பது அதன் பொருள். இதிலிருந்து மக்கள் பெரும்பான்மையாக அவ்வாறு சொல்வதில்லை என்பதும் விளங்குகிறது.
இனிமையாகச் சொல்வதிலும் தீயன நாடிச் சொல்வதுண்டு. இது உள்ளத்திலே தீமையை வைத்து, உதட்டிலே உறவு வைத்துப் பேசுவதாகும். இதை வள்ளுவர் வெறுத்து, இனிமையாகச் சொல்வதிலும் நல்லவை நாடிச் சொல்லவேண்டும் என இக்குறளில் வற்புறுத்துகிறார். இது இன்சொல்லின் உயிரோட்டத்தையே நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது.
நல்லவை நாடி இனிய சொலின் அறம் பெருகும் என இக்குறள் கூறுவதானது, நல்லதை எண்ணி, நல்லதைச் சொன்னால் நல்லது விளையும் என இன்சொல்லின் விளைவையே நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது.
இன்சொல்லின் விளைவு நன்மைகள் விளைவது மட்டுமல்ல; “தீமைகளும் அழியும். அதுவும் தேய்ந்து தேய்ந்து அழிந்தொழியும்” என்று கூறி, இக்குறள் நமக்கு மற்றொரு நன்மையையும் வழங்கிக்கொண்டிருக்