பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

79

அம்பிகையின் சந்நிதி. இவளையே தாயுமானவர் மலைவளர் காதலிப் பெண் உமை என்று அழகொழுக அழைக்கிறார்.

ஆரணி சடைக் கடவுளர்
அணியெனப் புகழ் அகிலாண்ட
கோடியீன்ற
அன்ளையே! பின்னையும் கன்னியென
மறைபேசும் ஆனந்த
ரூப மயிலே!
வார் அணியும் கொங்கை மாதர்
மகிழ் கங்கைபுகழ் வளமருவு
தேவ அரசே
வரை ராஜனுக்கு இரு கண்மணி
யாய் உதித்த மலை வளர்
காதலிப் பெண் உமையே!

என்று பாடிப் பாடிப் பரவசம் அடையலாமல்லவா?

இங்குள்ள நந்தி சுதையால் உருவானவர்தான். நல்ல பெரிய நந்தி, நீளம் பன்னிரண்டு அடி, உயரம் ஒன்பது அடி. கீழ்க் கோபுர வாயிலில் பெரிய அனுமார் இருக்கிறார். பிரதம லிங்கரைப் பிரதிஷ்டை செய்யும் பாக்கியத்தை இழந்தவர் என்று அவர் பார்வையிலுள்ள ஏக்கத்திலிருந்தே தெரியும். ராமேசுவரத்தில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தம்தான் விசேஷமானது. இக்கோயில், கோயில் பிராகாரங்களைச் சுற்றியே இருபத்திரண்டு புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. இந்தத் தீர்த்தங்களில் எல்லாம் ரசாயன சத்துக்கள் இருப்பதால் புண்ணியத்தோடு தேக ஆரோக்கியமும் உண்டாக்கும். எல்லாத் தீர்த்தங்களும் புராண மகத்துவமும் பெற்றவை. கோயிலுக்கு நேர் கிழக்கேயுள்ள கடல்துறைதான் முக்கியமானது. அதுவே அக்கினித் தீர்த்தம். இங்கேதான் தீர்த்தாடனம் தொடங்கவேண்டும். கடைசியில் கோயிலுள் உள்ள கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் ஆடிய பிறகு ஊரிலே தங்கக்கூடாது