பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

179


உபகாரம் வீண் போகாது.

உபசரிப்பு இல்லாத உணவு கசப்பு ஆகும். 4150

உபசரியாத மனையில் உண்ணாது இருப்பதே கோடி தனம்.

(வீட்டிலே.)

உபசாரம் செய்தவருக்கு அபசாரம் பண்ணுகிறதா?

(எண்ணுகிறதா?)

உபசார வார்த்தை காசு ஆகுமா? உண்டால் ஒழியப் பசி தீருமா?

உபசார வார்த்தை வாய்க்குக் கேடு; தூற்றுப் பருக்கை வயிற்றுக்குக் கேடு.

உபநயனம் இல்லாமல் கல்யாணம் பண்ணினானாம். 4155

உபாத்தியாயர் நின்று கொண்டு பெய்தால் சிஷ்யன் ஓடிக்கொண்டே பெய்வான்.

உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?

உம் என்றாளாம் காமாட்சி, ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி,

(மீனாட்சி. காமாட்சி.)

உமக்கு என்ன, வயசுக்கு நரைத்ததோ, மயிருக்கு நரைத்ததோ?

உமி குத்திக் கை நோகலாமோ? 4160

உமி குற்றிக் கை வருந்துமாறு

(பழமொழி நானூறு.)

உமி சலித்து நொய் பொறுக்கினாற் போல.

உமியும் கரியும் இருக்கின்றன; உடைமை செய்யப் பொன் இல்லை.

உமியைக் குத்திக் கை சலித்தது போல.

உயர்ந்த அடுப்பு அமர்ந்த அடுப்பு. 4165

(அயர்ந்த.)

உயர்ந்த காற்றைக் காற்று மோதும்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகுமா?

(கருடன்.)

உயிர் அறியும் உறவு,

உயிர் இருக்க ஊனை வாங்குகிறது போல.

உயிர் இருக்கும் போது குரங்கு; இறந்த பிறகு அநுமார். 4170

உயிர் இருந்தால் உப்பு மாறித் தின்னலாம்.

(உப்பு விற்றுப் பிழைக்கலாம், உண்ணலாம்.)

உயிர் உதவிக்கு மிஞ்சின உதவி வேறு இல்லை,

உயிர் உள்ள மட்டும் தைரியம் விடலாமா?