உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

25

 ஓர் ஏர்க்காரன் உழுது கெட்டான்; நாலு ஏர்க்காரன் நிறுத்திக் கெட்டான், பத்து ஏர்க்காரன் பார்த்துக் கெட்டான்.

ஓர் ஏரை விரைவில் மறி.

ஓர்ப்படியாள் பிள்ளை பெற்றாள் என்று ஒக்கப் பிள்ளை பெறலாமா? 6280


ஓரக் கண்ணனைப் பழிக்கிறான் ஒன்றரைக் கண்ணன்.

(ஒற்றைக் கண்ணன்.)

ஓரக் கண்ணும் காகக் கண்ணும் ஆகா.

ஓரண்டைக் காடும் காடு அல்ல; ஓரேர் உழவு உழவும் அல்ல.

ஓரம் சொன்னவன் ஆருக்கும் ஆகான்.

ஓரம் வெளுத்து ஒரு பக்கம் செல் அரிக்க. 6285


ஓராம் கண்ணியா, ஒருத்தன் ஆள?

ஓலை டப்பாசு உதறிக் கடாசு.

ஓலைப் பாயில் நாய் மோண்டாற்போல.

(பேண்டாற் போல.)

ஓலைப் பாயில் பேண்ட நாயைப்போல ஏன் சள சள என்கிறாய்?