இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
152
தமிழ்ப் பழமொழிகள்
நீலம் பிடிக்கிற வார்த்தை.
- (பொய்.)
நீலத்துக்குக் கறுப்பு ஊட்ட வேண்டுமா?
நீலிக்குக் கண்ணீர் நிமையிலே,
- (இமையிலே.)
நீலிக்குக் கண்ணீர் நெற்றியிலே; மாலிக்குக் கண்ணீர் மடிமேலே.
நீலிக்கு நிலக்கண்ணில் தண்ணீர். 14700
நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
நீறு இல்லா நெற்றி பாழ்.
- (+ நெய் இல்லா உண்டி பாழ்,)
நீறு பூத்த நெருப்புப் போல்,