பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

55

சந்நிதிகளிலும் வணங்கலாம். இங்குள்ள பெருமானை அர்ச்சகர்கள் 'சர்வாங்க சுந்தராய நம: ஓம், காவேரி தீர ரஸிகாய நம: ஓம் என்றெல்லாம் அருச்சிப்பார்கள். இவன் காவேரி தீரத்தை நாடி வந்ததால் இவனைத் தேடிக் கங்கை, யமுனை, கோதாவரியும் ஓடி வந்திருக்கிறார்கள். கோவிலுக்குத் தெற்கே ஓடும் நாட்டாறே தக்ஷிண கங்கை, அதற்கும் தெற்கே ஓடும் கீர்த்திமானாறே தக்ஷிண கோதாவரி, அதற்கும் தெற்கே ஓடும் அரசிலாறே தக்ஷிண் யமுனை. வசதி உள்ளவர்கள் எல்லாம் நதிகளில் மூழ்கி, புண்ணியப் பேறுகள் பெறட்டும்.

இந்த விண்ணகரத்துக் கார்மேனிக் கண்ணனை முப்பது பாசுரங்களால் பாடிய மங்கை மன்னன் வேண்டேன் மனை வாழ்க்கையை' என்று விரக்தியோடு பேசியிருக்கிறார். அந்த மனை வாழ்க்கையை அவர் விரும்பாதது எந்த நிலையில் என்று தெரிய அவர் பாசுரத்தையே படிக்கவேணும்.

அண்ணல் செய்து, அலைகடல்
கடைந்து, அதனுள் கண்ணுதல்
நஞ்சு உண்ணக் கண்டவனே!

விண்ணவர் அமுது உண்ண
அமுதில் வரும் பெண்ண முது
உண்ட எம்பெருமானே!

ஆண்டாய் உனைக் காண்பது
ஓர் அருள் எனக்கு
அருளிதியேல்

வேண்டேன் மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே!

என்பது அவரது பாடல். நடராஜனது எடுத்த பொற்பாதம் காணப் பெற்றால், மனிதப் பிறவி வேண்டுவதே என்று