உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பழமொழிகள் 4/யா

விக்கிமூலம் இலிருந்து



யா

யாசகம் புருஷ லக்ஷணம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

(புறநானூறு.)

யார் குடி கெட்டாலும் நீருடி மிளகு சாறு. 19310


யாரால் கெட்டேன்? நோரால் கெட்டேன்.

(நோரு வாய்.)

யாவையும் பாடிக் கோவை பாடு.

யானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்.


யு


யுகத்திற்கு யுகம் வித்தியாசம் உண்டு,

யுகம் முடிய மழை பெய்தாலும் ஒட்டாங் கிளிஞ்சல்

கரையுமா? 19315

(பயிராகுமா?)



யோ


யோக்கியர் வருகிறார்; செம்பை எடுத்து உள்ளே வை.

யோக்கியவான பாக்கியம் பிள்ளையிலே தெரியும்.

யோக்கியனுக்குப் பயப்படாவிட்டாலும் போக்கிரிக்குப் பயப்பட

வேண்டும். யோக்கியா, யோக்கியா, வீட்டைப் பார்த்துக் கொவி என்றால்,

என் கை திருட்டுக் கை, இழுத்துச் சத்திக்கொவி என்பானாம்.

யோகக்காரன் பலலக்கு ஏறுவான். 19320


யோசனை நல்லதுதான்; வண்டிதான் சண்டை சப்பட்டை.



ரங்கமே ஸ்தலம், கம்பமே ஜலம்.

ரங்கனே தெய்வம், பொங்கலே பிரசாதம். கம்பமே

தீர்த்தம். ரசவாதிக்கு ஏது பஞ்சம்? சத்த பாசம் விடாது. 19325


ரதிக்கு மன்மதன் வாய்த்தது போல.

ரவி அறியாததைக் கவி அறிவான்.

ரகூைடி உள்ள இடத்தில் சிகூைடி இருக்கும்.



ரா


ராகு கொடுத்தாலும் கொடுப்பான்; கெடுத்தாலும் கெடுப்பான்.

ராகு தசையில் வாழ்ந்தவனும் இல்லை; ராஜா தசையில்

கெட்டவனும் இல்லை.

19330

(ராஜா - குரு.)


ராகுவைப் போல் கொடுப்பவன் இல்லை; சேதுவைப் போல் கெடுப்பவன் இல்லை.

ராங்கி மிஞ்சி ரும் தேடுகிறது: ஆக்கிப் போட ஆள் தேடுகிறது.

ரrங்கி மொச்சைக் கொட்டை இர மூன்று நாளாய் ஊறின கொட்டை, பொழுது விடிந்து பிதிககிப் பார்த்தால் தோல் கூட வராத கொட்டை.

ராட்டினம் வருகிறது; வண்டியை விலக்கு.

ராத்திரி செத்தால் எண்ணெய்க்கு விதி இல்லை; பகலில் செத்தால்

வாய்க்கரிசிக்கு வழி இல்லை. 19835


ராத்திரி படிக்கிறது ராமாயணம்; விடிந்து இடிக்கிறது பெருமாள் கோயில்.

ராத்திரி பிறந்தவர்களும் உதவாது: பகலில் பிறந்தவர்களும் உதவாது.

ராத்திரி முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்றது போல,

சாபனா என்றாளாம்

ராம பாணம் பட்டு உருவினாற் போல. 19340


ராம பாணமே பாணம்; அது எங்கே போச்சுதோ காணோம்.

ராமர் இருக்கிற இடம் அயோத்தி.

ராம ராஜ்யம். ராமரைப் போல ராஜா இருந்தால் அநுமானைப் போலச் சேவகன்

இருப்பான்.
(இருக்க வேண்டும்.)

சாம லகஷ்மணரைப போல இசைந்திருக்கிறது. 19345


ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?

ராமன் மங்கையோடு இணங்கியது அவம்.




ராமன் வாக்குக்கு இரண்டு உண்டோ?

ராமனைப் போல ராஜா இருந்தால் அநுமானைப் போலச் சேவகனும் இருப்பான்.

ராமஸ்வாமி சகாயம், வயிறு வளர்ப்பது உபாயம் 19350


ராமாமிர்தமே ஜீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?

ராமாயணம் ரங்கு: பாரதம் பொங்கு.

ராமாயணம் வண்ட புராணம்; பாரதம் பண்ட புராணம்.

ராமேசுவரத்துக்குப் போகும்போது பாம்பனாறு குறுக்கிட்டாற் போல,

(போக.)

சாமேசுவரத்துக்கும் காசிக்கும் போயும் பிடித்த சனிசுவரன் தொலையவில்லை. 19385


ராமேசுவரம் போனாலும் சனிசுவரன் பின்னோடே.

ராயரி இட்டது கட்டளை.

ராயரி ஏறின குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் ஏது?

ராயர் தர்பார்.

ராவண சந்நியாசி 19360


ராவணன் குடிக்கு மகோதரன் போலும்; சுயோதனன் குடிக்குச் சகுனி போலும்.

(கயோதனன் துரியோதனன்.)

ராவுத்தர் தவிட்டுக்கு ஆலாய்ப் பறக்கிறாராம்; குதிரை கோதுமை ரொட்டிக்குப்

பறக்கிறதாம்.

ராவுத்தருக்கு மேற்கே பிரயாணம்; குதிரைக்குக் கிழக்கே பிரயாணம்.

(ராவுத்தருக்குக் கிழக்கே பயணம்...மேற்கே.)

ராவுத்தனே சினந்திருக்கும் போது குதிரை கோதுமை ரொட்டிக்கு அழுததாம்.

ராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியையும் பறித்ததாம் குதிரை. 19365


ராஜகிரியைக் காவுகிறது போல.

ராஜ சமுகத்துக்கு எலுமிச்சம் பழம் போல.

(சிறப்பு.)

ராஜபத்தினி பதிவிரதை.

ராஜப் பயலோடே கூடித் தாதப் பயலும் கெட்டானாம்.

(ராஜாப் பல்.)

ராஜ வரும்படியோ, நஞ்சை வரும்படியோ? 19370



ராஜா ஆனாலும் தன் தாய்க்கு மகனே.

ராஜா ஆனைமேல் வருகிறார் என்று வீட்டுக் கூரைமேல் ஏறினானாம்.

ராஜா இருக்கப் பட்டணம் அழியுமா?

ராஜா எவ்வழி, குடிகளும் அவ்வழி.

ராஜா ஏறிய குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் ஏது? 19375


ராஜா ஏறிய குதிரையைப் போல.

ராஜா கடன்படப் புழுக்கை காடித்தண்ணிர் குடித்தது போல.

ராஜா கேட்கக் கேட்க இன்னொன்று புறப்படுகிறது என்றானாம்.

ராஜ செங்கோல் தன் நாடு வரையில்.

ராஜா பெண்ணுக்கும் எனக்கும் பாதிக் கல்யாணம் ஆகிவிட்டது என்றானாம். 19380


ராஜா பெரியவனோ? போக்கிரி பெரியவனோ?

சாஜா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்.

(பெண் சாதி.)

ராஜா மெச்சினவள் ரம்பை,

ராஜா ராஷ்ட கிருதம் பாபம்.

ராஜா வந்தது ஆயிரம் குயனுக்குச் சமானம். 19385


ராஜாவின் பலம் இருந்தால் அஷ்டமத்துச் சனி என்ன செய்யும்?

(ராஜா-குரு.)

ராஜா வீட்டுத் தோட்டத்தில் ரோஜாப்பூப் பூத்திருந்தால்

பார்க்கலாமே தவிரப் பறிக்கலாமா?

ராஜா வீட்டு நாய் மாதிரி.

ராஜாவுக்குச் சாவு இல்லை.

ராஜாவுக்கச் செங்கோல்; சம்சாரிக்கு உழவு கோல். 19890

(சம்சாரி.உழவன்.)


ராஜாவும் பெண்ணும் கொடியும் கிட்ட இருக்கிறதைத் தழுவிக் கொள்ளும்,

ராஜாளியைக் கண்ட கொக்குப் போல.

ராஜீகம் தெய்விகம் எப்படியோ?

ராகூடிசனுக்கும் ஒரு புரோகிதன் வேண்டும்.

ராகூடிசனுக்கும் ஒரு புரோ கூடிஸன் உண்டு. 19395




ரி

ரிஷி உடைமை இராத் தங்காதது போல.

ரிஷி கர்ப்பம் இராத் தங்காது.

ரிஷிப் பிண்டம் இராத் தங்காது.

ரிஷி மூலம் நதி மூலம்.


ரு


ருசி கண்ட நாக்குச் சும்மா இராது. 19400


ருசி கண்டி பூனை அடுப்பங்கரை ஏறும்.

ருசி கண்ட பூனை உறி உறியாய்த் தாவுமாம்; வரிசை கண்டமாப்பிள்ளை வந்து வந்து நிற்பானாம்.

(உறி உறியை.)

ருசி கண்ட பூனை உறியை எட்டி எட்டித்தாவுமாம்.

ருத்திராக்ஷப் பூனை

ருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினது போல. 19405


ருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாதது போல் இருக்கும்.



ரூ


ரூபாய் அணாவில் இருக்கிறது உலகம்.

ரூபாய் என்றால் வயிறு நிறைந்து போகுமா?

(நிறையுமா?)


ரெ


ரெங்கூனிலிருந்து வந்தவனைச் சிங்கப்பூரில் என் பேரனைப் பார்த்தாயா என்று கேட்டது போல.

ரெட்டி ஒச்சே முதல் எழுத்து. 19410


ரெட்டிபாளையத்திலிருந்து இரண்டு தடிக்கழுறைகள் வந்தன; அறுகம்புல்லை விட்டுக் கோரைப் புல்லைத் தின்றன.

ரெட்டியாரே, ரெட்டியாரே என்றால் கலப்பையைத் திட்டென்று போட்ட கதை.

ரெட்டியோ, மட்டியோ?

ரெயிலுக்கு ரூல் இல்லை; கழுதைக்குக் கடிவாளம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_4/யா&oldid=1161616" இலிருந்து மீள்விக்கப்பட்டது