தமிழ்ப் பழமொழிகள் 4/மை
மை இட்ட கண் கை விட்டு அழும்.
மை இட்ட கண்ணிலே மை இடு: மாமியார் பிட்டத்திலே கை இடு.
மை கரையாமல் அழுபவள் சமர்த்து. 19215
மை கரையாம முதுகு ஆட்டு.
மைத்துனன் உண்டானால் மலை ஏறிப் பிழைக்கலாம்.
மைத்துனனை விட உறவு இல்லை; மயிரைவிடக் கறுப்பு இல்லை.
மை மை சுந்தரி, கதவை ஒஞ்சரி.
மையலை ஊட்டும் மாதரின் மகிமை, 19220
மைலங்கி, மைலங்கி, பூ எங்கே வைத்தாய்? வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன்.
மை விழியார் மனை அகல்.
மை விழியாள் தன்னைச் கைவிட்டு ஒழுகு.
மைனர் ஜாலி, மணிபர்ஸ் காலி,
மொச்சைக் கொட்டை தின்றாலும் பொச்செரிப்பு: மோர் விட்டுச் சாப்பிட்டாலும் பொச்செரிப்பு. 19225
மொட்டு மொட்டு என்று விழித்திருந்தான்.
மொட்டை அடித்து விட்டார்.
மொட்டை இட்டால் கட்டை இடும்.
மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.
மொட்டைச்சிக்கு முழங்காலில் பிள்ளை. 19230
மொட்டைச்சி சொருக்கை நினைத்து அழுதது போல.
மொட்டைச்சி முண்டைக்குக் கல்யாணம் ஆகி அவள் திட்டுத் திடுக்கென்று தெருக்கோலம் போனாளாம்.
மொட்டைத் தலைக்கு ஒரு கொட்டுக் கூடை; மோழைத் தலைக்கு ஒரு தாற்றுத் கூடை.
மொட்டைத் தலைக்கு ஒரு பட்டுக் குல்லாய்.
மொட்டைத் தலைக்குச் சந்தனம் வந்தால் உள்ள மயிரைக் கொண்டுதான் சிலுப்ப வேண்டும். 19235
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல.
மொட்டைத் தலைச்சிக்குக் கூந்தல் அழகி என்று பெயர் வைத்தாற் போல.
மொட்டைத் தலையன் சன்னதம் வந்தால் உள்ள மயிரைக் கொண்டுதான் சிலுப்ப வேண்டும்.
மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.
மொட்டைத் தலையன் முழு மோசக்காரன். 19240
மொட்டைத் தலையில் தண்ணீர் விட்டாற் போல.
மொட்டைத் தலையில் பட்டம் கட்டி ஆள வந்தானோ?
மொட்டைத் தலையில் பேய் வருமா?
மொட்டைத் தலையில் பேன் சேருமா?
- (பேன் போல.)
மொட்டைத் தலையும் குடுமித் தலையுமாய்ப் பிணைக்கிறது. 19245
மொட்டைத்தாதன் ஊரிலே மொட்டையனைத் தேடியது போல.
மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தால் எடுப்பார் இல்லை,
பிடிப்பார் இல்லை.
மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான்.
மொட்டைத்தாளம் குட்டையில் விழுந்தாற் போலே.
மொட்டை மரத்திலே முந்நூறு காக்காய்; தட்டிப் பார்த்தால்
ஒன்றும் இல்லை. 19250
மொட்டைமாடு தலையைக் கழற்றிக் கொண்டது போல.
மொட்டை மாடும் சரி, கொம்பு மாடும் சரி.
மொண்டி மாடு வந்துதான் பட்டி அடைக்க வேண்டும்.
மொண்டு ஆளுகிற வீட்டில் கொண்டு ஆண்டா முடியும்?
- (நிறையும்?)
மொண்டு தின்கிற வீட்டில் கொண்டு தின்று முடியுமா? 19255
மொட்டைச் சோற்றுக்கு மோளம் அடிக்கிறான்.
- (மேளம்,)
மொந்தைத் தன்ணீரில் வீடு வெந்து போனால் மிடாத்தண்ணீருக்கு
- எப்படி?
மொரோ என்றவன் கழுத்தில் லிங்கத்தைக் கட்டினானாம்.
- (முறையோ.)
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
மொழி தவறாதவன் வழி தவறாதவன். 19260
மொழியது அற மொழி.
- (மொழி வழி.)
மொழிவது மறுக்கின் அழிவது தருமம்.
மோகத்துக்கு அவன் பார்த்து இட்டதே பிஷை
மோகம் முப்பது நாள்: ஆசை அறுபது நாள்.
மோகனக்கல் ஆனாலும் பளு ஏறினால் உடையாதா? 19265
மோசம் செய்வோன் நாசம் அடைவான்.
மோசம் நாசம் கம்பளி வேஷம்.
மோசம் பாய் போட்டுத் தூங்குகிறது.
மோட்டை போனால் கோட்டை போகும்.
மோடு போயும் முண்டைக்குப் புத்தி வரவில்லை. 19270
மோதிரப் பணத்துக்கு முத்தண்ணா.
மோந்த பூவைச் சூடார்; சூடிய பூவை மோவார்.
மோந்தாற் போல முகத்தைக் கடிக்கிறது.
மோப்பம் அறியா நாயும் ஏப்பம் இல்லா விருந்தும் பயன் இல்லை,
மோப்பம் பிடித்த நாயும் தூக்கம் கெட்ட நாயும் சும்மா இரா, 19275
மோரிக்கடன் முகட்டைத் தொடும்,
மோர் சுடுகிறது என்று ஊதிக் குடிக்கிறது போல.
மோர் மோரோடே, நீர் நீரோடே.
மோர் விற்ற காசு மூன்று நாள் வரும். 19280
மோருக்குப் போகிறவருக்கு முட்டி பிறகாலேயோ?
மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பானேன்?
மோருககும் முலைப்பாலுக்கும் தோஷம் இல்லை.
மோரைத் தெளித்தாலும் கல்யாணந்தான்; மூத்திரத்தைத்
தெளித்தாலும் கல்யாணந்தான்.
மோரோ என்பவன் கழுத்தில் லிங்கம் கட்டினது போல. 19285
மோனம் என்பது ஞான வரம்பு,
மோனம் ஞானம்,
மோகடித்துக்கு அவன் பார்த்து இட்டிதே பிஷை
மெளனம் உடையாருக்கு வாராது சண்டை.
மெளனம் கலக நாசம். 19290
மெளனம் கலகம் நாஸ்தி.
மெளனம் சம்மதத்துக்கு அடையாளம்.
மெளனம் சர்வார்த்த சாதகம்.
மெளனம் மலையைச் சாதிக்கும்.
மெளனி குடியைக் கெடுப்பான். 19295
யதா தேவதா ததா தான்ய.
யதார்த்தமே உத்தமம்.
யதார்த்தவாதி வெகுஜன விரோதி.
யதாராஜா ததா ப்ரஜன.
யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி, 19300
யமன் ஒருவரைக் கொல்வான்; ஏற்றம் மூவரைக் கொல்லும்,
யமன் கடாவை ஏரில் பூட்டினது போல.
யமன் கையில் அகப்பட்ட உயிர் போல.
யமன் பிள்ளையைப் பேய் அடிக்குமா?
யமன் வாயில் அகப்பட்ட உயிர் திரும்பி வராது. 19305
யமனுக்கு ஏழு பிள்ளை கொடுக்க மாட்டார்கள்.
யமனைக் கண்ட உயிர் போல.