உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பழமொழிகள் 4/மி

விக்கிமூலம் இலிருந்து



மி

மிகுதி ஆசை அதிக நஷ்டம்.

மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை; வேதக்காரனுக்கும் உலகத்துக்கும் பகை,

மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும். 18575

(உணவு.)


மிகைபடச் சொல்லேல்.

மிச்சத்தைக் கொண்டு மேற்கே போகாதே; கெட்டுக் கிழக்கே போகாதே.

மிஞ்சி இல்லா விரலும் மஞ்சள் இல்லா முகமும் பாழ்.

மிஞ்சின கருமம் அஞ்சச் செய்யும்.

மிஞ்சின சுண்ணாம்பையும் மெலிந்த அரசனையும் விடக் கூடாது. 18580


மிஞ்சினது கொண்டு மேற்கே போனால் ஆகாது.

(மிச்சத்தை எடுத்துக் கொண்டு, போகாதே.)

மிஞ்சினால் மென்னி, கெஞ்சினால் கால்.

மிடா விழுங்கிச் சிற்றப்பனுக்கு வறட்டு ஆடு கருவாடு.

மிடி இதயம் கொள்; மீளாக் கதி தொடர்.

மிடிமையிலும் படிமை நன்று. 18585


மிடுக்கல் ஏறிய குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் எது?

மிடுக்கன் சரக்கு இருக்க விலை பெறும்.

(விலை போகும்.)

மித்திர நேசம் விபத்தில் தெரியும்.

மிதிக்க மிதிக்க லாபம் உண்டு.

மிதித்தாரைக் கடிக்காத பாம்பு உண்டா? 18590


மிதித்தாரைக் கடிக்காது; விதித்தாரைக் கடிக்கும் கால சர்ப்பம்.

மிதித்தால் கடிக்கும் பாம்பு.

மிதி பாகல் விதையோடே.

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

(மருண்டவன்.)

மிருகங்களில் ஆனை பெரிது; அதிலும் சிங்கம் வலிது. 18595


மிருகம் முறை பார்க்கிறதா. வேசி முறை பார்க்க?

மிருத்தியுவின் கடைவாயிலே அகப்பட்டாற் போலே.

மிளகாய்ப்பழம் தின்பானேன்? நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போடுவானேன்?

மிளகு அத்தனை பிள்ளையாருக்குச் கடுகு அத்தனை நைவேத்தியம்.

மிளகு சிறுத்தாலும் வீரியம் போகாது. 38500

(விறுவிறுப்பு, காரம்.)


மிளகுப் பொடியோடே திருவாதிரை.

மின் மினிப் பூச்சிக்கு இருள் போகுமா?

(பூச்சி வெளிச்சத்துக்கு.)

மின்னல் இல்லாமல் இடி உண்டா?

மின்னல் வெட்டிலே முளை நோட்டம் பார்த்தாற்போல.

மின்னலிலே வெட்டு முளை நோட்டம் பார்த்தாற் போல். 18605


மின்னலைக் கண்டு விதை விதைத்தானாம்.

மின்னலைப் போல் பல்லை விளக்காதவனும் மினுக்கிக் கொள்வானும் பதர்

மின்னாமல் இடி விழுமா?

(இடிக்குமா?)

மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தது போல.

மின்னினால் மழை பெய்யும். 18610

(பெய்யுமா?)


மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.

மின்னுவதெல்லாம் பொன் அல்ல; வெளுத்ததெல்லாம் பால் அல்ல.

மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும்.

(அன்பு.)

மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு. 

மீ

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. 18615


மீசை அடிப்பதற்காகவா அப்பன் சாக வேண்டும்.

மீசை இல்லா முகமும் மேனி இல்லா அழகும் பாழ்.

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை.

மீசையை முறுக்கி வளர்; முருங்கையை முறித்து வளர்.

மீதூண் விரும்பேல். 18620


மீந்த சுண்ணாம்பையும் மெலிந்த ராஜாவையும் கைவிடக் கூடாது.

மீன் இருக்கப் புளியங்காயைத் தின்னுமா?

மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்குகிறதா?

மீன் குழம்போ? தேன் குழம்போ?

மீன் செத்தபோதே சினை செத்துப் போச்சுது. 18625


மீன் தண்ணீர் குடித்தாற்போலே.

மீன் தின்னாத கொக்கும் உண்டோ?

மீன் பிடிக்கிறவனுக்குத தூண்டிலிலே கண்.

மீன் விற்ற காசு நாறுமா?

மீன் விற்ற காசு பார்ப்பானுக்கு ஆகாதா? 18630


மீன மேஷம் பார்க்கிறது.

மீனுக்கு நீச்சம் கற்றுக் கொடுக்க வேண்டுமா?

மீனுக்கு வாலைக் காட்டு; பாம்புக்குத் தலையைக் காட்டு.

மீனும் செத்தது. சினையும் செல் அரித்துப் போயிற்று.

மீனை மீன் விழுங்கினாற்போல். 18635 

மு

முக்காட்டின் கீழே கை காட்டுகிறது.

முக்காட்டுக்குள்ளே கை காட்டுவாள்.

முக்காட்டுக்குள் சமுதாடா.

முக்காட்டுக்குள்ளே மூடு மந்திரமா?

முக்காட்டுச் சிக்கு அறாது. 18640


முக்காடு இட்டது முதல் பிள்ளை.

முக்காணிக்கு அழுவது போல விட்டு விட்டுப் பெய்யும் மழை.

முக்காலும் சுமந்தாலும் முயல் கைத் தூக்குத்தான்.

முக்கால் அளந்தால் கொக்காய்ப் பறக்கும்.

முக்கால் அறுக்குண்டவள் பொல்லாக் கனாக் கண்ட கதை. 18645


முக்கால் நத்தை பெருமைப்படும்; மூடர் எதாலும் பெருமைப் படார்.

முக்கால் பணத்துக் குதிரை மூன்று பணத்துக்குப் புல் தின்னும்.

முக்கால் பணத்துக்கு மருத்துவம் செய்யப் போய் மூன்று பணத்து நெளி போன கதை.

முக்கால் பணத்துக் கோழி மூன்று பணத்துத் தவிடு தின்னும்.

முக்கால் முக்கால் மூன்று தடவை. 18650


முக்குடி ஒரு குடி குடியாதே; ஐம்பிடி ஒரு பிடி பிடியாதே.

(ஆசமனியத்தை ஒரு முறை செய்யக் கூடாது; பிராணாஹுதியை ஒரு தடவையாகச் செய்யக் கூடாது.)

முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா?

(கங்கையில் முழுகி அன்னம் ஆகுமா?)

முக்கூட்டுச் சிக்கு அறாது.

முகக் கோணலும் கண்ணாடி பார்த்தால் தீருமா?

முகடு முட்ட வரும் கோபம் துரும்பு குத்த வேலை. 18655


முகத்தில் அடித்தாலும் வயிற்றில் அடிக்காதே.

முகத்தில் ஆழாக்கு அருள் இல்லை.

முகத்தில் இல்லாத புகழ் பிட்டத்தில் வந்ததா?

முகத்தில் ஆடவில்லை.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். 18660


முகத்தில் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான்.

(திரிகிறான்.)

முகத்தில் மூத்தவன் வாசம்.

(மூத்தவள் மூதேவி.)

முகத்தில் விழித்த தோஷம் வயிற்றில் வந்து விட்டது.

முகத்தில் விழித்தால் மூன்று நாளைக்குச் சோறு அகப்படாது.

முகத்து இச்சைக்கு முத்தார் கிட்டே போனாளாம் 18665


முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு அவிசாரி போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம்.

முகத்துக்கு அஞ்சி மூத்திரம் குடித்தால் குலத்துக்கு ஈனம்.

முகத்துக்கு முகம் கண்ணாடி.

முகத்துக்கு முகம் குரங்கு முகம்,

முகத்து வேர்வை நிலத்தில் விழப் பிரயாசைப் பட்டாற்போல. 18670


முகத்தைப் பார், சப்பாத்திப் பழம் பூசிய குரங்கு மாதிரி.

முகத்தைப் பார்த்தால் பால் வடிகிறது.

முகத்தைப் பார்த்துக் கையைப் பார்.

முகத்தைப் பார்த்துப் பேசு.

முக தரிசனம் முக்கால் மைதுனம். 18675


முக தாட்சண்யத்துக்கு முண்டைச்சி கர்ப்பிணி ஆனது போல.

முகப்பிலே முத்தையா செட்டியார் வாருங்கள் என்று சொல்லுமுன்

மூன்றாங் கட்டில் உள்ள முத்தாத்தாளாச்சி மூன்று பணியாரத்துக்குப் போட்டாற் போல.
(செட்டி நாட்டு வழக்கு.)

முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?

முகம் சந்திர பிம்பம்; அகம் பாம்பின் விஷம்.

முகாந்திரம் இல்லாமல் பகைக்கிறதா? 18680


முச்சந்தியில் நிற்கிறான்.

முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை; முழுதும் கெட்டவனுக்கு துக்கம் இல்லை.

முட்ட நனைந்தவனுக்கு ஈரும் இல்லை. பேனும் இல்லை; முக்காடு என்ன?

முட்ட நனைந்தவனுக்கு முக்காடு என்ன?

முட்ட நனைந்தார்க்குக் குளிர் இல்லை. 18685


முட்டம் கோடி முப்பத்திரண்டு அணைகள்.

முட்டரோடு ஆடிய நட்பு. கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.

முட்டாக்குப் போட்டு மூலையில் உட்கார்த்தி வைத்த பிறகும் மெச்சிக் கொள்வதற்கு எச்சில் இலை எடுத்தாளாம்.

முட்டாள் என்ன சொன்னாலும் கட்டோடே கேளான்.

முட்டாள்களில் முட்டாள் கிழ முட்டாள். 18890


முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.

முட்டாள் நாயக்கனும் முரட்டுத் துலுக்கனும் பட்டாளத்துக்குத்தான் சரி.

முட்டாள் பயலுக்கு இரட்டைப் பிரியம்.

முட்டாள் பிடித்த முயலுக்கு மூன்று கால்.

முட்டாள் பையனுக்கு இரட்டைப் பெண்டாட்டி. 18695


முட்டாள் முண்டத்துக்கு இரட்டைப் பிரியம்.

முட்டாளுக்கு இரண்டு ஆள்.

(எட்டு.)

முட்டாளுக்கு என்ன சொன்னாலும் கட்டோடே கேளான்.

முட்டாளுக்குக் கோபம் மூக்கின் மேலே.

முட்டாளுக்குத் தன் குணம் நூலிலும் செம்மை. 18700


முட்டாளுக்குப் பட்டால் தெரியும்.

முட்டாளுக்கு முட்டாள் தண்டனிட்ட விண்ணப்பம்.

முட்டாளுக்கு முழங்காலில் புத்தி.

முட்டாளுக்கு மூன்று இடத்திலே மலம்.

முட்டாளுக்கு மோர் அதிகம். 18705


முட்டாளுக்கு மோருஞ் சாதம்

முட்டாளும் சட்டை செய்யான்.

முட்டி ஊட்டின குட்டி முதார் குட்டி.

(மூட்டி ஊட்டின கன்று முதற்கன்று.)

முட்டிக் கால் கழுதை பட்டவர்த்தனப் பரி ஆகுமா?

முட்டிக்குப் போனாலும் முகராசி வேண்டும்; பிச்சைக்குப் போனாலும் பேர் ராசி வேண்டும்; அவிசாரி போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும். 18710

முட்டிக்குப் போனாலும் மூன்று பேர் உதவாது.

(முட்டி-பிச்சை.)

முட்டி கொள்ளப் போனாலும் மூன்று பேர் கூடாது.

(முட்டிக் கொள்ள.)

முட்டிப் பார்ப்பான் முறையீடு மொட்டைப் பசுவின் பாய்ச்சலோடு விட்டுப் போனது.

(திருவாலவாயுடையான் திருவிளையாடற் புராணம், 38.80.)

முட்டிய பிறகு குனிவதா?

முட்டி விட்டுக் குரையும் புத்தி முட்டாள் புத்தி. 18715


முட்டிற்று என்றாள் மூத்தாள்.

முட்டின கோபம் முட்டக் கெடுக்கும்.

முட்டினால்தான் குனிவார்கள்.

முட்டினால் முற்றம் கதி.

முட்டு அற்ற பெண்ணுக்கு இரட்டைப் பரியமா? 18720 }}

(நாரிக்கு பரியம்.)


முட்டுக்கு முட்டு அல்ல: மூடக் கதவும் அல்ல; சந்நிதி வாசலுக்குச் சாத்தக் கதவும் அல்ல.

முட்டுப் பட்ட பிற்பாடு குனிகிறது.

முட்டுப்பட்டு ஜயம் வருமானால் குட்டுப் பட்டால் குறைவு என்ன?

முட்டும் முன் குனிய வேண்டும்.

முட்டை இட்ட கோழிக்குத் தெரியும் பொச்சரிப்பு. 18725 }}


முட்டை இடுகிற கோழிக்கு எரிச்சலும் உண்டு.

முட்டை இடுகிற கோழிக்கு எரிவு தெரியும் அல்லது மற்றவருக்குத் தெரியாது.

முட்டை இடுகிற கோழிக்குப் பிட்டம் எரிபந்தம் உண்டு.

(எரிச்சலும்.)

முட்டை இடுகிற கோழிக்குப் பொச்சரிப்பு என்ன?

முட்டை இடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். 18730

(வலி.)


முட்டை இடுவதன்முன் குஞ்சை எண்ணுவது எப்படி?

முட்டைக் கண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் தொள்ளை.

முட்டைக் குஞ்சைப் பிட்டு வளர்ப்பது.

முட்டை கொண்டு எறும்பு திட்டை ஏறினால் மழை பெய்யும்.

முட்டையிலே கூவி முளையிலே கருகுகிறது. 18735


முடக்கச் சரக்கு இருக்க விலை போம்.

(முடக்குச் சரக்கு.)

முடக்கடிக்காரனுக்குப் புறக்கடை தடம்.

(கொங்குநாட்டு வழக்கு.)

முடங்கப் பாய் இல்லாமல் போனாலும் சடங்குக்குக் குறைச்சம் இல்லை.

மூடப் பிள்ளை ஆனாலும் மூத்தி பிள்ளை.

(முந்தின பிள்ளை.)

முடப் புல்லும் முக்கல நீரைத் தடுக்கும். 18740

(செறுக்கும்.)


முடிவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

முடவன் சண்டைக்குப் போனாற் போல.

முடவன் தண்ணீருக்குப் போனால் எட்டான் மெனக்கேடாம்.

(மூன்று பேர்கூடப் போகவேணும்.)

முடவனுக்குக் கொம்புத் தேன் எட்டுமா?

முடவனுக்குக் கோபம் விட்டி இடத்திலே. 18745


முடவனுக்கு நொண்டி சண்டப் பிரசண்டன்.

முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம் வரும்.

முடவனை மூர்க்கக் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்.

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை வாசற்படி தட்டும்

முடிக்காதவன் படிக்காதவன். 18750


முடிச்சு அவிழ்த்துக் கொடுத்ததும் அல்லாமல் இளிச்சவாய்ப் பட்டமும் கிடைத்தது.

(முடிச்சு இழந்ததும் மன்றி.)

முடிச்சு அவிழ்க்கப் போனாலும் மூன்று பேர் கூடாது.

முடிச்சு முடிச்சாய் நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?

(முடி முடியாய்.)

முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பலாய்ப் போகிறதே.

முடி பொறுத்த தலைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதா? 18755


முடி முடியாய் நட்டால் பிடி பிடியாய் விளையுமா?

(பொதி பொதியாய்.)

முடிய முடிய நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?

(முடி முடியாய் நட்டால்.)

முடியும் வகை யோசியாமலே முயற்சியை மேற்கொள்ளாதே.

(முயற்சி செய்யாதே)

முடி வைத்த தலைக்கு மேலே சுழிக்குற்றம் பார்க்கிறது கொண்டு குலம் பேசுவது போல் இருக்கிறது.

முடுக்கிலிருந்து குதிக்கிறதா? 18760

முடைப் புல் முக்குறுணித் தண்ணீர் செறுக்கும்.

முண்டக்கண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் நொள்ளை.

முண்டச்சி சம்பந்தக்காரன் முன்னுக்கு வருவானா?

முண்டச்சி பெரிய தனம் சுக்லாம்பரதரம்,

முண்டச்சி பெற்றது மூன்றும் அப்படியே 18735


முண்டச்சி வளர்த்த மகன் முண்டனுக்கு இரண்டு ஆவி .

(மூன்று ஆள்.)

முண்டைப் பையன் செங்காளி மூன்று வீட்டுக்குப் பங்காளி,

முனுக்கு என்றால் மூக்குக்கு மேலே கோபம்.

முணுமுணுத்த சாப்பாட்டைக் காட்டிலும் முரமுரத்த பட்டினி மேல்.

முத்தம் கொடுப்பதற்குள் முந்நூறு தடவை குணம் மாறும். 18770


முத்தால் நத்தை பெருமைப்படும்; மூடர் எத்தாலும் பெருமைப்படார்.

முத்திலும் சொத்தை உண்டு; பவளத்திலும் பழுது உண்டு.

முத்து அளக்கிறவளும் பெண் பிள்ளைதான்; மூசப் பயறு அளக்கிறவளும் பெண்

பிள்ளைதான்.
(முளைப் பயிறு.)

முத்து அளந்த கையால் மூசப் பயறு அளக்க வந்தது.

(முழுப்பயறு அளக்கக் காலம் வந்தது)

முத்து அளந்த கையால் மோர் விற்கிறதா? 18775


முத்துக்கு முத்தாய் இருக்கிறது.

முத்து குலத்தால் பெருமைப்படும்; மூடர் குலத்தால் பெருமைப்படார்.

முத்துத் தொழில் கச்சைத் தொழில், மற்றத் தொழில் பிச்சைத் தொழில்.

(கீழைக்கரைப்பக்க வழக்கு.)

முத்தும் பவளமும் முறை முறையாய்க் கோத்தது போல.

முத்து முத்தாய் இருக்கிறது. 48780


முத்தைத் தெளித்தாலும் கல்யாணந்தான்; மோரைத் தெளித்தாலும்

கல்யாணந்தான்.

முதல் இல்லாத பிள்ளை வட்டிக்குச் சீராடினான்.

முதல் இல்லாதவன் உயிர் இல்லாதவன்.

முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை.

(பழமொழி நானுாறு.)

முதல் உள்ளவனுக்கு லாபம். 18785 முதல் எடுக்கும்போதே தப்பட்டைக்காரன் செத்தான்.

முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?

முதல் கோணல் முற்றும் கோணல்.

(கோணினால்... கோனும் முட்டக் கோணல்.)

முதல் பணம் எங்கடா என்றால் என் கடா ஏரியில் மேயுது என்ற கதை.

முதல் பிள்ளை மூத்திரத்துக்கு அழும்போது இரண்டாம் பிள்ளை பாலுக்கு

அழுகிறதாம்.

18790


முதல் பிறந்த பிள்ளை உரல் குழியை நக்குகிறதாம்; திருப்பதிக்குப் போனாளாம்

திரும்ப வரம் கேட்க.

முதல் பிறந்த குழந்தை உரல் குழியை நக்குகிறதாம்; மூன்றாவது பிள்ளை

முந்தியை இழுக்கிறதாம்.
(தண்டைக்கு அழுததாம்.)

முதல் பிறந்த பிள்ளை உரல் பணையை நக்குகிறதாம்: தேவடியாளுக்குப் பிறந்த

பிள்ளை திரட்டுப் பாலுக்கு அழுததாம்.

முதல் பிறந்த பிள்ளை முத்துப் பிள்ளை; பின்னே பிறந்த பிள்ளை மாவுப்பிள்ளை.

முதல் மடைக்கு எருப் போடு; கடை மடைக்கு வரப்புப்போடு. 18795


முதலியார் வீட்டு நாய்க்கு முத்துமாலையின் பெருமை தெரியுமா?

முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.

(டம்பம்.)

முதலில் எடுத்துச் செலவிடாதே.

முதலிலே கெட்டிக்காரன், முடிவிலே சோம்பேறி.

முதலிலேயே துர்ப்பலை; அதிலும் அவன் கர்ப்பிணி. 18800

(துர்ப்பலம்.)


முதலுக்கு மிஞ்சினால் மோசம்.

முதலுக்கு மோசமாய் இருக்கிறது: லாபத்துக்குச் சண்டை போடுகிறதா?

முதலே துர்ப்பலை; அதிலும் கர்ப்பிணி.

முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும்.

முதலை தன் இடத்தில் மலை ஒத்த யானையையும் இழுத்துச் செல்லும். 18805

நாயின் காலை விட்டுப் புஸ்க மரத்தின் வேரைப் பிடித்தது போல. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார்.

முதலைவாய்ப் பிள்ளை மீண்டு வருமா?

முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப் போல.

முதுகில் அடித்தால் ஆறும்; வயிற்றில் அடித்தால் ஆறுமா? 18810


முதுகில் அடித்தால் பொறுக்கலாம்; வயிற்றில் அடித்தால் பொறுக்கலாமா?

முதுகில் அடித்தாலும் வயிற்றில் அடிக்காதே.

முதுகில் புண் இருந்தால்தானே குனியப் பயப்பட வேண்டும்?

(கூன.)

முதுகில் புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.

(காட்டிலே.)

முதுகிலும் முன் இருந்தால் முற்றத்திலும் நின்று ஆடமாட்டேனா என்று

ஆர்ப்பரிக்குமாம் தேரி மீன்.

18815


முதுகைச் சொறியச் சொன்னால் சிற்றிடையைச் சொறிகிறது ஏனோ?

முதுமைக்குச் சோறும் முறத்துக்குச் சாணமும்.

முதுகைத் தேய் என்றால் முலைமீது கை இட்டானாம்.

முந்தானை இருக்கிறது; நாலு வீடு இருக்கிறது.

முந்தியைப் பிடித்துப் போட்டு விட்டுக் குருவியைப் பிடித்து வாங்குவான். 18820


முந்திரிக் கொட்டை போல் முன்னே நிற்கிறான்.

முந்தி வத்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைத்ததாம்.

முந்தின சோற்றைத் தட்டினால் பிந்தின சோறு மலமும் சோறும்.

முந்தின சோறும் முனையும் குலைந்தால் பிந்தின சோறு மலமும் சோறும்.

முந்தினவன் கை மந்திர வாள். 18825


முந்தினோர் பிந்தினோர் ஆவார்; பிந்தினோர் முந்தினோர் ஆவார்.

முந்நாழி கறக்கிற பசு ஆனாலும் முன் இறப்பைப் பிடுங்குகிற பசு ஆகாது.

முந்நூறு மங்கலத்து முனி போல இருக்கிறான்.

(வட ஆர்க்காடு வழக்கு.)

முப்பணிதியும் இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறையா?

முப்பத்திரண்டு லக்ஷணங்களில் இரண்டுதான் குறைவு; தனக்காகவும் தெரியாது;

சொன்னாலும் கேட்பது இல்லை. 18830

முப்பதில் மூர்க்கம்: நாற்பதில் நாகரிகம்.

முப்பதில் வாழாதவன் மூடன்; முன்னும் பின்னும் தெரியாதவன்

குருடன்.
(வாழாதவன் முரடன்.)

முப்பது செருப்புத் தின்றவனுக்கு மூன்று செருப்புப் பணியாரம்.

முப்பது நாளும் போகம், பொற்பணமே வா.

முப்பது நாளே போ; பூவராகனே வா. 18835


முப்பது பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.

முப்பதும்போய். மூன்றும் தள்ளினவன் போல் பேசுகிறான்.

முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் :இல்லை.

(கெட்டவனும் இல்லை.)

முப்பேன் பிடிப்பது மூதேவி வாசத்துக்கு அடையாளம்.

முப்பொருள் ஆதிமூலம் ஆனவன். 18840


முயல் எத்தூரம் போனாலும் கைத் தூக்கு.

முயல்குட்டி சிங்கத்தை அடித்த கதை,

முயல் கொம்பு.

முயல் கோடு; ஆகாயப் பூ.

முயல் பிடிக்கிற நாய் மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா? 18845


முயல் விட்டுக் காக்கைப்பின் போனவாறு

(திருநாவுக்கரசு நாயானார் தேவாரம்.)

முயல் வேட்டைக்கும் பிள்ளையார் கோயில் ஆண்டிக்கும் ஒத்து வராது.

முயலுக்குக் கொம்பு இல்லை என்றாற்போல.

முயலுக்குக் கொம்பு கண்டவர் இல்லை என்றாற் போல.

முயலை எழுப்பிவிட்டு நாய் பதுங்கினது போல. 18850

(தூங்கியது போல. பதுங்கி விட்டது.)

முயலை எழுப்பிவிட்டு நாயைத் தேடுவதா?

முயலைக் கிளப்பிவிட்டு நாய் படுத்துக் கொண்டாற்போல.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

முயற்சி திருவினை ஆக்கும்.

(குறள்.)

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. 18855


முரட்டுத் தனத்துக்கு முதல்தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

முரட்டுத் தனத்துக்கு முதல் பாதம்.

முரட்டுத் துலுக்கனும் முட்டாள் நாயக்கனும் பட்டாளத்தைத் தவிர வேறு

வேலை இல்லை.
(பட்டாளத்துக்கு Fit.)

முரட்டுப் பெண்டாட்டி, இருட்டு அறை, சுருட்டுப் பாய்.

முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும். 18860


முரடனுக்கு மூங்கில் தடி.

முருக்கம்பூச் சிவந்ததனால் முடிப்பார்களா?

முருக்குப் பருத்தென்ன? தூணாகப் போகிறதா?

முருகனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை; மிளக்குக்கு மிஞ்சின வைத்தியமும் :இல்லை.

முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம். 18865


முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?

முருங்கக் கீரை முட்ட வாயு அகத்திக் கீரை அண்ட வாயு.

முருங்கைக் கீரை வெந்து கெட்டது; அகத்திக் கீரை வேகாமல் கெட்டது.

முருங்கைக்கு முந்நூறு தத்து.

முருங்கை பெருத்துத் தூண் ஆகுமா? 18870


முருங்கையை ஒடித்து வளர்க்க வேணும்; பெண்ணை அடித்து வளர்க்க வேணும்.

முலைக்குத்து வலி சவலைக் குழந்தை அறியுமா?

(தண்டலையார் சதகம்.)

முலை கொடுத்து வளர்த்தவள் மூதேவி, முன்றானை போட்டவள் சீதேவி.

முலை சரிந்தால் வயிறு தாங்கும்.

(முலை விழுந்தால்.)

முழங்காலில் கட்டின தாலிபோல. 18875


முழங்கைப் புண்போல முனை குலைந்து நிற்கிறது.

முழங்கையில் இடித்த சுகம் போல இருக்கும் மூத்தாள் பெண் வாழ்வு.

முழங்கையில் இடித்த சுகம் போல மூத்தாள் வாழ்கிறாள் புக்ககத்திலே.

முழங்கையில் பட்ட சுகம் போல.

முழங்கையில் பட்ட சுகமும் மூத்தாள் பசங்களின் வாழ்க்கையும். 18880

முழத்துக்கு மேலே அறுக்காதே; முடியைப் போட மறக்காதே,

(தையலில்.)

முழம் வரால், சாண் தண்ணீரில்.

முழிக்கிறதைப் பார்: கிழக் குரங்கைப் போல.

(விழிக்கிறதை.)

முழுச்சட்டி பேர்க்கிற பன்றிக்குக் கொமுக்கட்டி விட்டது போல.

முழுக்க முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு? 18885


முழுகிக் குளித்து முக்காதம் போனாலும் வக்கு கொக்கு ஆகுமா?

முழுகி முப்பது நான் ஆச்சது: இறங்கி உப்பு அள்ளக்கூடவில்லை என்கிறான்.

முழுச்சோம்பேறி முள் உள்ள வேலி.

முழுதும் கெட்டார்க்கு வெட்கம் ஏது?

முழுதும் நனைந்தவருக்கு ஈரம் இல்லை. 18890


முழுப்பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்.

(முண்டன்.)

முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைப்பது போல.

(சோற்றோடு.)

முள் ஒடிந்து முப்பது நிமிஷம் ஆச்சு.

முள் தைத்த துன்பத்தை முள்தான் போக்க வேண்டும்.

முள் மரத்தை முளையிலே கிள்ள வேண்டும். 18895


முள்ளாலே எடுப்பதைச் கோடரியால் எடுத்தானாம்.

முள்ளாலே எடுப்பதைக் கோடரியாலே இழுத்துக் கொள்ளாதே.

முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்; இரும்பாலே இரும்பை அறுக்க :வேண்டும்.

முள்ளின் மேல் சீலையைப் போட்டால் மெள்ள மெள்ளத்தான் எடுக்க வேண்டும்.

(வாங்க வேண்டும்.)

முள்ளினால் முள் களையுமாறு. 18900

(பழமொழி நானுாறு.)

முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.

முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?

முள்ளு முனையிலே மூன்றுகுளம் வெட்டினேன்; இரண்டு குளம் பாழ்;

ஒன்று தண்ணீரே இல்லை.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; அதுவும் முள் தைத்த வாய்வழியே

எடுக்க வேண்டும்.

முளைக்கையில் உண்டானதுதான் முற்ற வரும். 18905

முளைத்ததே மூன்று மயிர்; அதிலும் இரண்டு புழுவெட்டு.

முளைத்து மூன்று அமாவாசை ஆகவில்லை.

முளைத்து மூன்று இலை விடவில்லை.

முளைப்பாரைப் புதைப்பார் உண்டோ?

(இல்லை.)

முளையில் உண்டானதுதான் முற்றும் 18910


முனையில் கிள்ளாதது முற்றினால் கோடரி கொண்டு வெட்ட வேண்டும்.

முளையில் நகத்தால் கிள்ளிவிடுவதை முற்ற விட்டுக் கோடரி கொண்டு பிளக்க வேண்டும்.

முளையிலே அறுத்தவள்.

முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.

முற்பகல் கண்டான் விறன் கேடு, தவி கேடு பிற்பகல் கண்டுவிடும், 18915

(பழமொழி நானுாறு.)


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,

முற்படச் செய்யும் பயிரே நன்று.

முறப்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பில் மூண்டது.

முற்றக் கல்வி பேசாதே.

முற்றத்தில் வந்தவர் முப்பழி செய்தவர் ஆயினும் வா என்று

அழைக்க வேண்டும். 18920


முற்றத்து முல்லைக்கு மணம் இல்லை.

(மனம் தெரியுமா? மலையாள வழக்கு.)

முற்றின மரத்தில்தான் வைரம் இருக்கும்.

முற்ற நனைந்தவனுக்கு ஈரம் இல்லை; முழுதும் கெட்டிவனுக்குத்

துக்கம் இல்லை.

முற்ற நனைந்தார்க்கு ஈரம் இல்லை; முக்காடு போட்டிவளுக்கு வெட்கம் இல்லை.

முற்ற நனைந்தார்க்கு ஈரம் இல்லை: மூக்கறுபட்டவளுக்கு நாணம் இல்லை. 18925

(வெட்கம்.)


முற்றும் முடிவும் பார்த்து முயல்.

முறத்து அடி பட்டாலும் முகத்து அடி படல் ஆகாது.

முறித்து விடுவது எளிது; சேர்ப்பதுதான் கஷ்டம்.

முறிந்து ஓடும் விமானத்துக்குப் பறந்து ஓடி ஒட்டுப் போடுகிறவன்.

முறுக்கி வளர்க்காத மீசையும் அடித்து வளர்க்காத பையனும் அடக்கா. 18930


முறுக்கோடு சம்பந்தி மூன்றில் சாப்பிட்டாளாம்.

முறுகின புரி அறும்.

முறைமைக்கு முப்பு இளமை இல்லை

(பழமொழி நானுாது.)

முறையோ என்கிறனன் கழு ததில் லிங்கம் கட்டினால் மறைவிலே

அறுத்துப் போட்டுவிடுவான்.

முன் அளந்த நாழியே பின் அளக்கும். 18935


முன் ஏர் போன வழி பின் ஏர்.

முன் ஒன்று ஒதிப் பின் ஒன்று ஆடேன்.

முன் ஒன்றும் பின் ஒன்றும் பேசுகிறதா?

முன் இந்து பின் கந்து வாய்கிறவன்

முன்கை உடையார்க்குக் கொழுவே படைக்கலம். 18984


முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

முன் கோணல் முடியக் கோணல்.

முன் கோபக்காரனுக்கு மூக்கிலே கோயம்.

முன் கோபம் பின் இரக்கம்.

முன் நான் செய்த தவத்தால் மூன்று மயிர் தந்தோனே. இந்நான்

செய்த தவத்தாலே இருந்த மயிரும் இழந்தாயே! 18945

(மயிர் தத்தோம்.)


முன் நின்றனன் மூக்கை அறுத்துக் கொடுப்பான்.

முன் நேரம் கப்பல்காரவி, பின் நேரம் பிச்சைக்காரன்.

முன்வகை செப்தால் பின் பகை விளையும்.

முன் பணம் கொடுத்து முதல் இழந்த மாமியார் பின்னும்

கொடுத்ததும் பெண்டாட்டி ஆனான்,

முதியின் செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்? 18950


முன்பின் பாராமல் சொல்கிறதா?

முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?

முன் வைத்த காலைப் பின் வைக் மாட்டேன்.

முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உண்டோ?

(பெரிய புராணம்.)

முன்னால் இருந்த அதிகாரியைப் பின்னால் வருகிற அதிகாரி

நல்லவனாகச் செய்கிறது.

18955

முன்னால் பார்த்தால் சேவகன் குதிரை; பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை.

முன்னால் போனவன் முட்டிக் கொண்டால் பின்னால்

போனவனுக்கு வெளிச்சம் பேண்ட்ட மாதிரி.

முன்னால் போனால் கடிக்கிறது: பிவினால் போனால் உதைக்கிறது .

(எறிகிறது.)

முன்னுக்கு ஒன்று பின்னுக்கு ஒன்று.

முன்னே ஆட்டைப் பிடி பின்னே மாட்டை பிடி. 18960


முன்னே ஒரு குறுணி; பின்னே ஒரு முக்குறுணி.

முன்னே பாசி, பின்னே பார். உன்னைப் பார் என்னைப் பார்.

முன்னே பசர்த்தால் முதலாளியில் குதிரை: பின்னே பார்த்தால்

அதிகாரியின் கழுதை,

முன்னே பிறந்த காதைப் பார்க்கிலும் பின்னே பிறந்த கொம்பு பலம்.

முன்னே பிறந்த காதிலும் பின்னே முனைத்து கொம்பு வலிது. 18985

(முன்னே முனைத்த.)


முன்னே போகிறவன் இடறி விழுந்தால் பின்னே போகிறவனுக்கு எச்சரிக்கை.

முன்னே போகிறவன் கீழே விழுந்தால் பின்னே போகிறவனுக்கு

அதிகாந்த வெளிச்சம்.

முன்னே போகிறவன் தீவட்டி பிடித்தால் பின்னே போகிறவனுக்கு வெளிச்சம்.

முன்னே போனால் சிசுஹத்தி; பின்னே போனால் பிரமஹத்தி.

முன்னே போனால் முடடும்; பின்னே போனால் உதைக்கும். 18970


முன்னே வந்த மரத்தைப் பார்க்கிலும்.பின்னே வந்த கொம்பு பலம்.

முன்னைக்குப் போ. முகட்டைக் குழகுழப்பு.

முனியாதார் முன்னியது எய்தாமை இல்லை.

(பழமொழி நானுசறு,

முனிவரும் முன்னுவ பொன்னால் முடியும்.

(திருக்கோவையார் .)

மூ


மூக்கறைக்கு முகுசம் காட்டினால் கோபம் வரும். 18975

(முகுரம்-கண்ணாடி)


மூக்கறையள் கண்ணாடியைப் பார்த்தது போல.

மூக்கறையன் கதைபோல் பேசுகிறான்.

மூக்கறையனுக்குக் கண்ணாடிப் பகை.

மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான்;

பின்னும் போகவிடான்.

மூக்கில் இடித்ததாம்; பல்லுப் போச்சாம். 18980


மூக்கில் இருக்கிற மூக்குத்தி போனாலும் போச்சு; மூலையில்

இருக்கிற குப்பை போச்சு.

மூக்கில் பருக்கை வரும்படி தின்றான்.

மூக்கிலிக்குக் கண்ணாடி காட்டினது போல.

மூக்கு அறுபட்ட கழுதை துவானத்துக்கு அஞ்சாது,

மூக்கு அறுபட்ட மூளி காது அறுபட்ட காளியைப்பழித்தாளாம். 18985

(மூளியை.)


மூக்கு அறுபட்டவன் போல்.

மூக்கு இருக்கிற மட்டும் சளி உண்டு.

(உள்ளவரையும் சளி போகாது.)

மூக்கு உள்ள மட்டும் ஜலதோஷம் இருக்கத்தான் இருக்கும்.

மூக்குக்கு மேல் கோபம்.

மூக்குக்கு மேல் போனால் மூவாள் என்ன, நாலாள் என்ன? 18990

மூக்குத்துாள் போடாத முன்டத்துக்கு முப்பது பணத்தில்

வெள்ளி டப்பி.

மூக்குப்பிழை போனாலும் எதிரிக்குச் சகுனத்தடை ஆகவேண்டும்.

மூக்குப் புண் ஆறி அல்லவே தாசரி ஆகவேண்டும்?

முக்கும் முழியும்.

மூக்கு மயிர் பிடுங்கி ஆள் பாரம் குறையுமா? 18995

(பிடுங்கினால்.)

மூக்கு மயிர் பிடுங்கிக் கயிறு திரிக்கலாமா?

மூக்கு மயிர் பிடுங்கினது போல வருத்தம் வரும்,

மூக்கை ஏன் பிடிப்பது? மூதேவி வாசத்துக்கு அடையாளம்.

மூக்கைக் கின்னிப் போக்குக் காட்டினது போல.

மூக்கைப் பிடித்தால் அண்ணாந்து பார்க்க இடம் இல்லை. 19000

(அண்ணாத்து பார்க்கத் தெரியாது.)


மூக்கைப் பிடித்தால் சீவன் போகிறது.

(போகிற வேளை.)

மூக்கைப் பிடித்தால் வாயை ஆ என்னத் தெரியாது.

மூங்கில் இலை மேலே துரங்கும் பனிநீரே.

(பனிபோலே.)

மூங்கில் பாயும் முரட்டுப் பெண்டாட்டியும்,

மூச்சுப் பிடித்தால் வயிறு நிரம்புமா? 19005


மூஞ்சியில் மூன்றாம் பேங்து வைத்தாற் போல.

மூஞ்சியிலே அடித்தால்போல் பேசுகிறான்,

மூஞ்சியிலே கரியைத் தீற்றுகிறான்.

மூஞ்சியைக் காட்டுகிறான்.

மூஞ்சியைப் பார், முகத்தைப்பார். 19010


மூஞ்சையப்பன் முகத்தைப் பார்.

மூட்டை அளக்கிறான்.

மூட்டைக்காரச் சுவாமி.

மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.

மூட்டை துக்கி முத்தையன். 19015


மூட்டைப்பூச்சி உதிரத்தைச் இரசிக்கிறதைப்போலக் குடிப்பதா?

மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?

மூடர்கள் சேர்க்கையில் தப்பாமல் கெடுதி வரும்.

மூடர் கூட்டுறவு முழுதும் அபாயம்.

மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே. 19020


மூடருக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு.

மூடரோடு ஆடிய நட்பு. கடுவழியில் கட்டை ஊடாடிய கால்.

மூடன் உறவிலும் விவேகி பகை நலம்.

மூடன் சண்டை மூட்டுப் பிரிக்கும்; மோர்க்கடன் வீட்டைத் தேடும்.

மூடன் போல வாயாடுகிறதா? 19025


மூடனாய் இருக்கிற பிள்ளையினாலே எப்போதும் நஷ்டமே வரும்.

மூடனுக்குக் கோபம் மூக்கின் மேல்,

மூடனுடைய பங்கு தரித்திரமும் இகழ்ச்சியும்.

மூடிக் கொண்டிருந்தால் சமுக்கம்: திறந்தால் வெட்ட வெளி.

மூடி மூடிப்போகிறவன் ஒடி ஒடி மாப்பிள்ளை பிடிப்பான். 19030

(மூடி முக்காட்டுக்குள்ளே போகிறவள். மாப்பிள்ளை கொள்வாள்.)


மூடிய முத்து உலகம் பெறும்.

(மூவுலகும் விலை பெறும்.)

மூடி வைத்த புண் ஆறாது.

மூடிவைத்தாலும் முணுமுணு என்னும்; தைத்து வைத்தாலும் டம் டம் என்னும்.

மூடின உடைமை மூன்று முலோகம் பெறும்; மூடாத உடைமை முக்கால் காகம் பெறாது.

மூடு மந்திரம். 19035


மூடு முக்காட்டுக்குன்னே போகிறவள்தான் ஒடி ஒடி மாப்பிள்னை கொள்ளுகிறது.

மூண்ணாம் முறை பகர்த்தும்போழ் சமுதிரம் மூத்ரமாகுன்னு.

(மூன்றாம் முறை எழுதும் போது சமுத்திரம் மூத்திரம் ஆகிவிடும். மலையாளப் பழமொழி.)

மூத்த குமரிக்கு முதுகிலே குழந்தை.

மூத்தது மோழை; இளையது காளை.

மூத்த பெண்ணோ, நாத்தனாரோ? 19040


மூத்தவள் போகும் போது அழகு இளையவள் வரும்போது அழகு.

(மூத்தவளிடம் மூதேவி, இளையாவனிடம் லஷ்மி.)

மூத்தவருக்குப் பிறகு இளையவருக்கு முறையா?

மூத்தாள் சருகு அரிகசு, இளையான் அநுபவிக்கிறான்.

மூத்தான் பதிவிரதை என்றால் இளையாள் அவிசாரியா?

(யாா்)

மூத்தாள் பெண் வாழ்வும் முழங்கையில் பட்டி சுகமும். 19045


மூத்தான் வாழ்வு முழங்கையில் இடித்த இடம் போல இருக்கும்.

மூத்தாளும் முட்டுக்கு உதவுவாள்.

மூத்தாளே வாடி, முட்டிக் கொண்டு சாவோம்: இளையாளே வாடி மலையாளம் போவோம்.

மூத்தாளை விட்டு இளையாளைப் பட்டம் கட்டின கதை.

மூத்திரக் குழியில் தீர்த்தம் ஆடுகிறதா? 19050


மூத்திரத்தை நம்பிக் கட்டுச்சாதத்தை அவிழ்த்தானாம்.

மூத்திரம் பெய்வதற்குள் முந்நூற்றெட்டுக் குணம்.

(முப்பத்தெட்டு.)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

மூத்தே சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் கசக்கும்; பின்தித்திக்கும்.

(முது நெல்லிக்காயும். முன் கசக்கும்; பின் இனிக்கும்.)

மூத்தோர் வார்தையைத் தடுக்கிறதா? 19055

(தட்டுகிறதா?)


மூதேவிக்கு முகூர்த்தம் வைத்தால் முப்பது நாழிகையும் ராகு காலம்

மூதேவி. மூதேவி. முகம் கழுவா மூதேவி.

மூதேவி வாழும் இடத்தில் சீதேவி வாழ்வாளா?

மூப்பிலும் தருமம் செய்ய முயற்சி செய்,

மூப்பு ஏன் பிடிப்பது? மூதேவி வாசத்துக்கு அடையாளம். 19060


மூப்புக்குச் சோறும் முறத்துக்குச் சாணியும்.

மூர்க்கம் உள்ள ராஜாவும் மூட மந்திரியும் அழிவா்கள்

மூர்க்கரை மூர்க்கரி முகப்பர்

(உகப்பர் )

மூர்க்கரோடு இணங்கினால் ஏற்க வேணும் அபகீர்த்தி,

மூரிக்கன் முகத்தில் மூதேவி குடி இருப்பாள். 19065


மூர்க்கனுக்கு முதல்.

மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.

மூர்க்கலும் முதலையும் சரி.

மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான்; மூடனைச் சேர்ந்தவன் படியான்.

மூர்த்தி சிறிது: கீர்த்தி பெரிது. 19070


மூலக் காற்றப் புழு விழும்.

மூலத்துப் பெண் மாமியார் மூலையிலே.

(மூக்கிலே.)

மூலவருக்கே மொந்தைத் தண்ணிர் இல்லை என்றால் ஆலயம்

எல்லாம் அபிஷேகமாம்.

மூலிகை அறத்தால் மூன்று வருஷம் ஆளலாம்,

(அறிந்தால். )

மூலையில் இருப்பவரை முற்றத்தில் வைத்தது போல. 19075


மூலையில் திட்டுகிறவனை முற்றத்தில் இழுத்த கதை.

மூலையிலே சுந்தரம், ஒதுகிறானடி மந்திரம்.

மூலை வீட்டிலே முட்டை இடுகிறான்.

மூலைந்து கூடினால் மூளியும் பெண் ஆவான்.

மளிச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வேக வேண்டும். 19080

(வேகிறது ஒன்று.)


மூளி நாய்க்குப் பட்டது மிச்சம்

மூன்றாம் ஈற்று மாட்டுக்கு முதுகு எல்லாம் பால்.

மூன்றாம் கட்டு அவிழ்த்தால் தெரியும்.

மூன்றாம் பேஸ்து வைத்தவன் மூஞ்சி மாதிரி.

மூன்றாம் மாதத்தில் முறிகிழங்கு ஆகும்; நாலாவது மாதத்தில்

நார்க் கிழங்கு ஆகும். 19085


மூன்றாம் மாதம் முறியல் கிழங்கு.

(பனை )

மூன்றாம் வயசில் மூலையில இருக்கிற வார்த்தை எல்லாம் வரும்.

மூன்றாவது மாதத்தில் முறிகிழங்கு ஆகும்; நாலாவது மாதத்தில் நார்க் கிழங்கு ஆகும்.

(பனை,)

மூன்றாவது முதுகு எல்லாம் பால்.

மூன்று அடி அடித்து முள் உடைந்தது போல 19090


மூன்று அடியும் அடித்துப் போர் மேலேயும் போட்டாச்சுது.

மூன்று ஐம்பது வாழ்வானா?

மூன்றுக்கு ஒன்று முதலுக்கு நாலும்,

(முதலுக்கு மூன்று.)

மூன்று காசுக் குதிரை. ஆறுகாசு வைக்கோல் தின்கிறதாம்.

மூன்றுகுசினிக்காரர்கூடிச் சூப்பைக் கெடுத்தாற் போல. 19095

(குசினிக்காரன்-சமையற்காரன்.)


மூன்று தலைமுறையும் முட்டாள்.

மூன்று பல்லும் போனவருக்கு முறுக்குக் கடையில் என்ன வேலை?

மூன்று பிடித்து எண்ணும் பேர் வழி.

(மூணு.)

மூன்று பேர் சேர்ந்தால் மோசம்; நாலு பேர் சேர்ந்தால் நாசம்.

மூன்று பேர் வழிக்குத் துணை; இரண்டு பேர் பிணையல் மாடு; ஒருவன் போனால் பரதேசி. 19100


மூன்று பொருளையும் தேடு; முதிர் வயதில் ஊன்று கோல் ஆகும்.

மூன்று மாசத்துக்கு ஒரு மாரி பெய்தால் ஒருபோகம் விளையும்.

மூன்று மாசத்துக்கு முன்னே பல் போனவனுக்கு முறுக்குக் கடையில் என்ன வேலை?

மூன்றுமுடி கழுத்திலே: முப்பது இலை தெருவிலே.

மூன்று முடிச்சுக் கழுத்தில் விழட்டும்; முப்பது இலை குப்பையில் விழட்டும். 19105


மூன்று முழமும் ஒரு சுற்று முப்பது முழமும் ஒரு சுற்று.

மூன்று லோகமும் பூசை கொண்ட முழுச்சாமியார்.

மூன்று வயசில் மூலையில் இருப்பது எல்லாம் வரும்.

மூன்று வீட்டுக்கு முக்காலி; நாலு வீட்டுக்கு நாற்காலி.

மூன்றே முக்கால் நாழிகைக்குள் முத்து மழை பெய்தது; வாரி எடுக்கு முன்னே மண் மாரி பெய்தது. 19110

(வாரி எடுக்கு முன்னே மண் மாரியாய்ப் போயிற்று.)

மெ

மெச்சி எச்சில் இலை போட்டு மீந்ததை மடியில் கட்டுவார்களா?

மெச்சிக் கொள்ளுகிறதற்கு எச்சிலை எடுக்கிறது.

மெட்டி போடுவதில் என்ன இருக்கிறது? தட்டி நடப்பதில் இருக்கிறது.

மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்.

மெத்தப் படித்தவருக்குச் சோறு வெல்லம். 19115


மெத்தப் படித்தவன் சித்தம் சரியில்லை.

மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.

மெத்தப் பரிவாம் உள்ளே எரிவாம்.

மெத்தப் புடைவை மெத்தக் குளிர்.

மெத்தை நேர்த்தி, தலையணை பீற்றல். 19120


மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.

மெதுவாய்ச் சாப்பிட்டால் அதிகம் கொள்ளும்.

மெய் ஆனால் வைத்துக் கொள்; பொய் ஆனால் விட்டு விடு.

மெய் இருந்து விழிக்குது; பொய் இருந்து பொரிக்குது.

மெய் என்று இருந்தேன், விழித்தேன் கனவாக. 19125


மெய் ஒழுக்கத்தார்களுக்கு மேன்மை இல்லை ஒருகாலும்.

மெய்க்கும் பொய்க்கும் விரற்கடை தூரம்.

மெய் கிடந்து மெலியுதாம்; பொய் கிடந்து பொலியுதாம்.

மெய் கொண்டு விழிக்கிறது; பொய் கொண்டு புரிகிறது.

மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை. 19130


மெம் சொல்லி வாழாதவன் பொய் சொல்லி வாழ்வானா; மெய்ஞானம் உடையாருக்கு அஞ்ஞானம் இல்லை.

மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.

(மேன்மை.)

மெய் தவிக்கும்? பொய் புலம்பும்.

மெய் நின்று விழிக்கிறது; பொய் நின்று கூத்தாடுகிறது. 19135

(பொரிகிறது.)

மெய்ம்மை சாற்ற வையம் ஏற்றும்.

மெய் மூன்றாம் பிறை, பொய் பூரண சந்திரன்.

மெய்யது நன்றி இடும்.

மெய்யனுக்கு ஐயம் இல்லை: பொய்யனுக்கு லாபம் இல்லை.

மெய்யான சத்தியன் வேதவாசகன். 19140


மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால் பொய் போலும்மே

பொய் போலும்மே.

மெய்யைப் பொய் அழிக்குமா?

மெல்லச் சாப்பிட்டால் கொள்ளை போமா?

மெல்லப் பாயும் தண்ணி கல்லையும் குழியப் பாவும்.

(உருவச் செல்லும்.)

மெல்லவும் மாட்டாமல் சொல்லவும் மாட்டாமல் விழிக்கிறான். 19145


மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழிக்கிறான்.

மெல்லிசு நோனா எல்லிட்டுக் கூத்தியாள்.

மெல்லியலாள் தோள் சேர்.

மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருவிச் செல்லும்.

(கல்லிலும் குழியச்செல்லும்.)

மெலட்டு மினுக்கு: திருவாரூர் திப்பிசம். 19150


மெலிந்தவனுக்கு மெத்தப் பலன்; மேனி மினுக்கிட்டவளுக்கு

மெத்தக் கசம்.

(மெத்தச் சுகம்.)

மெலுக்கிலே அலைக்கழிவு.

மெழுகாய் உருகுகிறான்.

மெழுகாலே ஆகிலும் வெள்ளைத் தலை வேணும்.

மெழுகின வீட்டில் நாய் புகுந்தது போல. 19155


மெழுகுப் பிள்ளையார் போலத் தொளுவு தொளுவு என்று இருக்கிறது.

மெள்ள இருந்துதான் தள்ளவேணும் பகையை.

மெள்ள மெள்ள வந்தாளசம்; கட்டில் மெத்தை போட்டாளாம்.

மெள்ள மெள்ள வந்தானாம்; மிளகு என்றானாம்; சுக்கு என்றானாம்.

(மெள்ள மெள்ள வந்தான், மிளகு சுக்கு என்றான்.)

மெனக் கெட்ட பூதி தினைக்குத்தப் போனாளாம். 19160

மே


மேகத்தில் பறக்கிற குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் ஏது?

மேட்டிமைக்காரருக்கு எதிர்த்து நிற்க வேண்டும்; மெத்தனக்காரருக்குக்

கிருபை அளிக்க வேண்டும்.

மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி.

மேட்டிலே போனால் தங்கச்சியும் பள்ளத்திலே வந்தால் பென்டிாட்டியுமா?

மேட்டுக்காகப் பயமாம்; வீதி வழியில் திகிலாம். 19465


மேட்டு நிலத்தை உழுதவனும் கெட்டான்; மேட்டுப் பின்ளையைப்

பெற்றவனும் கேட்டான்.

மேட்டு நிலத்தை உழுதவனும் கெட்டிான்; மேல் மினுக்கித்

திரித்தவனும் கெட்டான்.

மேட்டுப் பயிரை உழுதவனும் கெட்டான்; மேட்டுப் பயலைத்

தொட்டவனும் கெட்டான்.
(மேட்டுப் பயிரை இட்டவனும்.)

மேட்டுப்பாளையத்துப் பருப்பு நீலகிரியில் வேகாது.

மேடும் சரி. பள்ளமும் சரியா? 19170


மேய்க்காமல் கெட்டது மாடு; பாய்ச்சாமல் கெட்டது பயிர்.

மேய்க்காலில் ஊட்டினால் பல்லாயில் பால் ஏது?

மேய்க்கும் மேய்ப்பானை வியக்கும் வாயன்.

மேய்கிற கழுதைவயக் கூவுகிற கழுதை கெடுத்ததாம்.

(கூவுகிற மாடு.)

மேய்கிற கோழியின் மூக்கை உடைத்தாற்போல. 19175


மேய்கிற மாட்டின் கொம்பிலே புல்லைக் கட்ட வேணுமா?

மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்ததாம்.

மேய்கிற மாடு நக்குகிற மாட்டை இழுத்துக்கொண்டு போயிற்றாம்:

மேய்கிற நாளைக்குப் பால் பீச்சிக் குடித்தது லாபம்.

மேய்த்தால் கழுதை மேய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன். 19180

மேய்த்தால் மதனியை மேய்ப்பேன்; இல்லையென்றால் பரதேசம் போவேன்,

(மைத்துணியை.)

மேய்த்துத் தெளியாத மாடு தேய்த்துத் தெளியும்.

மேய்ப்பவன் போனால் ஆடு தொழுவத்தில் இருக்குமா?

(மேய்ப்பனார்.)

மேய்ப்பான் கண்ணிலும் உடையவன் பிடரி நலம்.

மேய்ப்புப் பாதி; தேய்ப்புப் பாதி. 19185


மேயப் போகிற மாட்டுக்குக் கொம்பிலே புல் கட்ட முடியுமா?

(புல் கட்டிக் கொண்டா போகிறது?)

மேயப் போகிற மாடு கொம்பிலே புல்லைக் கட்டிக் கொண்டு போகிறதா?

மேருவை அடைந்த காகமும் அமிருதம் உண்ணும்.

மேருவைச் சார்ந்த காகமும் பொன் நிறமாம்.

(அடைந்த.)

மேல் உதடு இல்லாதவன் வேய்ங்குழலுக்கு அச்சாரம் கேட்டது போல். 19190


மேல் காணும் இனிமையால் காலுக்கு நோய் காட்டில் கலுழ்ந்தான்.

மேல் நோக்கிய மரமும் கீழ் நோக்கிய கிணறும்.

மேல் மினுக்கியைக் கட்டினவனும் மேட்டுப் புன்செய்யை உழுதவனும் கெட்டான்.

மேலே பார்த்தால் சிங்காரம்; உள்ளே பார்த்தால் ஓக்காளம்.

மேலே பார்த்தால் மினுக்குத்தான்; உள்ளே பார்த்தால் தொளுக்குத்தான். 19195


மேலைக்கு இருப்பாரும் இல்லை; கூலிக்கு அறுப்பாரும் இல்லை.

(இறுப்பாரும்.)

மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.

(கூலிக்கு.)

மேலைக்குத் தாலி கட்டுகிறேன்; கழுத்தே சுகமாயிரு என்றால் போல.

(மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன்.)

மேலோர் அறிவு கீழோர்க்குவருமா?

மேழிக்கு உடையவன் வேளாளனே 19200


மேழிச் செல்வம் கோழை படாது.

(படுமா?)

மேளகாரனுக்கு ஏற்ற மத்தளக் கட்டை.

மேளம் கொட்டும் மாமியாருக்குத் தாளம் போடும் மருமகன்.

மேற்குப் பார்த்த மாளிகையை விடத் தெற்குப் பார்த்த குடிசை மேல்.

மேற்கே மழை பெய்கிறதென்றால் ஆற்றில் இறங்கலாமா? 19205


மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.

மேல் மக்கள் சொல் கேள்,

மேன்மையின் மேன்மையன் மேலாம் பதவியன்.

மேனா மினுக்கியைக் கொண்டவனும் கெட்டான்; மேட்புலே பயிர் இட்டவனும் கெட்டான்.

(மேண்.)

மேனா மினுக்கியைக் கொண்டவனும் கெட்டான்; கூட்டுப் 19210


பயிரை உழுதவனும் கெட்டான்.

மேனி எல்லாம் சுட்டாலும் விபசாரம் செய்கிறவள் விடாள்.

மேனி ஒறுப்பே ஞானி நினைப்பு.

(எலும்பே.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_4/மி&oldid=1161610" இலிருந்து மீள்விக்கப்பட்டது