பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்



343


மாற்றான் வலியறிந்து உரிய வலிமையைப் பெற முயலுக என்பதே வள்ளுவம் உணர்த்தும் வாழ்வியல் முறை.

தம்மின் வலியாரோடு பகை கொள்ளுதல் தற்கொலைக்குச் சமம். ஆதலின், அதனைத் தவிர்த்திடுக! மனத்தைத் தீமையினின்றும் பாதுகாப்போம்! அவ்வழி வாழ்வாங்கு வாழ்வோம்.

‘வவியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.’

861

‘அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.’

863