பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உவமேய முதல்வன்
(கருத்தா) (குறளெண்)
உவமானப் பொருள் உவமான விளக்கம் உவமானச் சிறப்பு (இறைச்சி)ப் பொருள்
பேரறிவாளன் செல்வம் (215) :
(பேரறிவுடையவன் ஆகையால் ஒப்புரவுணவு மிக்குடையவன்) (பேரறிவுடைமையால் பொருட்பெருக்கத் திற்கும் வழிசெய்திருப்பான் என்க.) (அறிவால் சிறந்தவன்)
ஊருணி நீர்
  • ஊரே உண்கின்ற நீர்நிலை
  • எல்லார்க்கும் பொதுவானது.
  • குடிக்க மட்டின்றிச் சமைக்கவும் உதவுவது.
  • எக்காலத்தும், தங்கு தடையின்றிப் பயன்பெறுவது
  • ஊரில் உள்ள எல்லார்க்கும் மட்டின்றி, வரும் போகும் வழிப்போக்கரும் பயன் பெறுவது.
  • ஊற்றுள்ளதாகலின் எடுக்க எடுக்கக் குறையாமல் இருப்பது
  • அடிக்கடி பயன்தருவது
  • நாட்பயனுக்கு மட்டின்றி, விழவு, நற்செயல், தீச்செயல் அனைத்துக்கும் உதவுவது.
  • குடிக்க மட்டின்றி உணவு சமைக்கவும் உதவுவதால் குடும்பத்திற்கே உயிர்க்காப்பது.
நயனுடையான் செல்வம் (216)
  • நடுநிலை உணர்வு உள்ளவன்
  • பொதுவாக மட்டுமின்றிச் சிறப்பாகவும் நோக்குபவன்.
  • தேவைக்கு ஏற்ப அளவிட்டு ஈபவன். (செயலால் சிறந்தவன்)
பயன்மரம் பழுத்தல்
  • பழுத்து நிற்கின்ற பயன் தரும் மரம்.
  • அடிக்கடி நீர், எரு, காப்புச் செய்தல் முயற்சி தேவை.
  • தேவையான பொழுதெல்லாம் அன்றிப் பருவத்தால் மட்டுமே உதவுவது.
  • முந்துபவர்க்கே முதற்பயன் தருவது.
  • பிந்துபவர்க்கு முறை சொல்லலும் நேரலாம்.
  • அனைவர்க்குமே அன்றி, அளவான் விளைவுக்குத் தக்கபடி பலர்க்கும் பயன்தருவது.
  • பழவித்துகளால் அவரவரும் தத்தம் இடத்துப் பதியன் போட்டுக் கொள்ள உதவுதல் போல், பிறரையும் மூலமுதல் தந்து வளர்த்தெடுக்க உதவுவது.