இளையர் அறிவியல் களஞ்சியம்/விமானப் படை
விமானப் படை : இராணுவத்தில் தரைப் படை, கப்பற்படை இருப்பது போன்று விமானப் படையும் உண்டு. எனவே, இராணுவத்தை ‘முப்படை’ என்று அழைக்கிறோம். கடற்கரை இல்லாத நாடுகளில் கப்பற்படை இருப்பதில்லை. ஆனால், விமானப்படை இல்லாத நாடோ, ராணுவமோ இல்லை எனலாம்.
போர்க்காலத்தில் தரைப்படையும் கப்பல் படையும் எவ்வளவு முக்கியத்துவமுடையதோ அதைவிட அதிக முக்கியத்துவமுடையதாக விமானப்படை கருதப்படுகிறது. கப்பல் படை கடலிலும் கடற்கரையோரங்களிலும் மட்டுமே சென்று போரிட முடியும், ஆனால், விமானப் படையோ மலைப்பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளின் மீதும் பறந்து சென்று தாக்கிப் போரிட முடியும். இதன் மூலம் விமானப்படை இராணுவத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவ முடைய பகுதியாக விளங்குகிறது. விமானப் படையைக் கொண்டு எதிரிகளின் தரைப் படையையும் கப்பற்படையும் தாக்கி அழிக்க முடியும். விரைந்து சென்று தாக்கி விரைந்து திரும்ப விமானத்தால் மட்டுமே இயலும்.
போர்க்காரணங்களுக்காக விமானப்படையில் மூன்றுவகை விமானப்பிரிவுகள் உள்ளன. அவை சாதாரண போர்விமானம், குண்டு வீச்சு விமானம், உளவுபார்க்கும் விமானம் ஆகியனவாகும். இவ்விமானங்கள் தங்கள் செயல் பாட்டிற்கேற்ப வெவ்வேறு வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும். இவற்றில் விமானியோடு, எதிரிகளோடு போரிடுவோரும் இருப்பர். விமானப் படையில் பல பிரிவுகள் உண்டு. விமானப் படை விமானங்கள் விரைந்து சென்று மீள்வனவாகும். ஆள் இன்றி குண்டு வீசும் தானியங்கி விமானங்களும் விமானப்படையில் உண்டு.
இந்திய விமானப்படை ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1988இல் உருவாக்கப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பின்னர் பிற துறைகளைப் போன்றே விமானப்படையும் திருத்தியமைத்து விரிவாக்கப்பட்டது.
இந்திய விமானப்படை விமான லகைகளில் பல தற்போது இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்றன. அவற்றுள் 'நாட்' மிக் 12, ஹெச் எஃப்.24 (HF 24) போன்றவை குறிப்பிடத்தக்க
வகையினவாகும். இவை ஒலி வேகத்தையும் விஞ்சிச் செல்வனவாகும். தரைப்படை.
கப்பல் படைகளுக்கென தனிவகை பயிற்சி நிலையங்கள் இருப்பது போன்றே விமானப் படை பயிற்சி நிலையங்கள், கல்லூரிகள் தனி வகைப் பயிற்சி தருகின்றன. இந்திய விமானப் படை உலக விமானப் படைகளுள் சிறந்த ஒன்றாகும்.