அடிகளார் அருளிய ஆவணம்
புலவர் இரா. இளங்குமரன்
திருத்தொண்டர்க்குத் திருத்தொண்டே வீடுபேறு. அதனினும் உயரிய வீடுபேறு, அவர்கள் தொண்டு வாழ்விலே ஊடுபுகுதல் இல்லை. ஆதலால் தான், திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழாரடிகள் தொண்டர் திறத்தை "வீடும் வேண்டா விறல்” என்றார்.
தொண்டே வாழ்வாகக் கொண்ட அப்பரடிகள், இறைநிலையோடு இணைவது தொண்டே என்பதை, “தொண்டலால் துணையும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்றார்.
தொண்டே வீடுபேறாகவும், இறைநிலையாகவும் கொண்ட தூயர், துறவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.
அவர்கள் வாழ்வுக் கொடை வானமாரி ஒப்பது. கால இட வரம்பற்றுப் பிறந்த மண்ணுக்கும் பெருநலவாழ்வு நாட்டமுடைய பெருநெறியர்க்கும் என்றும் ஆவணமாகத் திகழ்வது.
அடிகளார் வாழ்வா, உரையா, திருத்தொண்டா எல்லாம் எல்லாம் தமிழின விழிப்புக்கும், எழுச்சிக்கும், மீட்டெடுப்புக்கும் கட்டளைக் கல்லாகத் திகழ்வன.
இவற்றையெல்லாம் தொகுதி தொகுத்த பட்டயமாக்கித் தரும் குன்றக்குடித் திருமடத்திற்கும் வெளியிட்டுப் பேறு பெறும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் தமிழுலகு கடப்பாடும் நன்றியும் உடையது.
இத்தொகுதியில் அடிகளார் எழுத்து உண்டு. அடிகளாரைப் பற்றிய அறிஞர் எழுத்துகளும் உண்டு.
அடிகளாரைப் பற்றிய எழுத்திலும், அடிகளார் தம்மைப் பற்றித் தாமே எழுதிய தங்குறிப்பும் உண்டு; பிறர் எழுதியதும் உண்டு.
உரை எழுத்தும் உண்டு: எழுத்து உரையும் உண்டு.
அடிகள் ஒருவர் தாமா இதன்கண் உள்ளார்? அவரால் சுட்டப்படுவார் பன்னுற்றுவர் உளர். இது திரு.வி.க. எழுதிய வாழ்க்கைக் குறிப்புப் போல் இந்நூற்றாண்டில் கிடைத்த வாழ்க்கைக் குறிப்பு.
அடிகளாரைப் புரிந்து கொள்ள வேண்டுமா? ‘நடந்ததும் நடக்க வேண்டியதும்’ என்னும் முதற்கட்டுரை போதும்.
அடிகளார் நிலை மணிவாசகர் நிலையோடு ஒன்றி அடியிடுவதை “என்னால் அறியாப் பதந் தந்தாய்” என்னும் ஆனந்தமாலைப் பாடலைக் காட்டி.
ஆப் பாடற் தருத்து “நம்முடைய வாழ்க்கைக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்” என்னும் பொன்னுரை, பொன்னுரையாணி யேயாம். அடிகளோடு ஒன்றியவர் உடனாகியவர் அணுக்கராக