6
நம்முடைய நாட்டில் இந்த இழிவை மாற்ற மத உலகத்திலும் சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள்,ஆனால்,அவர்கள் கண்டபயன் தோல்வியே! நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் பயன் தருமா? சந்தேகந்தான்” என்றார்.
"இருவருமாகச் சேர்ந்து உழைப்போம்” என்றோம், நாம். பெரியார் சிரித்துக்கொண்டே ‘எனக்கு ஆட்சேபணை இல்லை. உங்கள் சம்பிரதாயங்கள் இடம் தருமா?’ என்றார்.
நாம், ‘முயற்சி செய்யலாம்: சம்பிரதாயங்கள் என்பவை காலந்தோறும் மாறுபவை தானே’ என்றோம்.
“சரிபார்ப்போம் முயற்சி செய்வோம்” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூற, பேச்சு முடிந்தது. (184-185)
- இந்நிகழ்ச்சி குன்றக்குடித் திருமடத்தில் நிகழ்ந்தது.
மதுரையில் டி.கே. சண்முகம் உடன்பிறந்தார் நடித்த இராசராச சோழன் நாடகம். அதில், அடிகளாரும் பெரியாரும் கலந்து கொண்டனர். நடிப்புத் திறனைப் பாராட்டிப் பேசிய பெரியார் “இவ்வளவு அற்புதமான கலைத்திறன், வெளவால்கள் அடையும் கோயிலைப் பற்றியதாக அமைந்துவிட்டமையைக் கண்டு வருந்துவதாகவும்” கூறினார். அடிகளார் தம் வாழ்த்துரையில், பெரியாரும் பெரியாரைச் சார்ந்தவர்களும் கோயிலுக்குள் வராததால் தான் வெளவால்கள் குடிபுகுந்து விட்டன. பெரியார் திருக்கோயிலுக்குள் வந்து விட்டால் வௌவால்கள் வெளியேறி விடும்” என்றார்.
இன்றேனும் இதனைப் போற்றியாக வேண்டிய கட்டாய ஆணைமொழி இது. நம் இசைக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக் கலை, வரலாற்றுக் கலை இன்னபலவற்றின் வைப்பகம் திருக்கோயில்களே! பாட்டன் கட்டிய வீட்டில் பாம்பு புகுந்து விட்டதென்றால் அதனை அகற்ற வேண்டுமே ஒழிய, வீட்டை விட்டு அகன்று விடுவது ஆக்கச் செயல் ஆகாதே!
மண்டைக் காட்டில் நிகழ்ந்த சாதி சமயச் சிக்கல் தீர்வில் அடிகளார் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொண்ட உறுதியும் ஊற்றமும் அஞ்சாமையும் ஒரு போர்ப்படைத் தளபதிக்கு உரியவையாம். (215)
அடிகளார் வழங்கிய உவமைகளை நூற்றுக்கு மேல் தொகுத்து வைக்கப்பட்டது அடிகளார் உவமை நயம் என்பது. முதல் உவமை ‘செடியும் - ஆன்மாவும்’ இது முதல் உவமையே! ஏன்? “முதல் இலார்க்கு ஊதியம் இல்லை” அல்லவா!
தொட்டி எவ்வளவு தான் அழகுடையதாக இருந்தாலும், அதில் நடப்பெறுகிற செடி சிறந்ததாக உயிரோட்டமுடையதாக இருந்தால்தான் உற்ற பயன் கிடைக்கும். அதுபோல், உடல் எவ்வளவுதான் வலிவும் பொலிவும் உடையதாக இருந்தாலும், உள்ளிருக்கும் ஆன்மா சிறந்ததாக இருந்தால்தான் சிறப்பு. செடியைப் பற்றிக் கவலைப்படாமல் தொட்டியைப் பாதுகாப்பது போல் பலர் ஆன்மாவைப் பற்றிக் கவலைப்படாமல் உடம்பைப் பேணிப் பாதுகாக்கிறார்கள். பூஞ்செடி இல்லையானால் தொட்டிக்கு என்ன மதிப்பு? பூஞ்செடிக்காகத்தான்