பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

130


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 13 o

2

5. வியாசம் வியாச முனிவரால் நிறுவப்பெற்ற உத்திர மீமாம்சை என்னும்

6.

மதம.

ஜைமிநி : ஜைமிநி என்னும் முனிவரால் உருவாக்கப் பெற்ற பூர்வ மீமாம்சை மதம். - - இனி, இவையன்றி, வைதிக மதங்களாகக் கூறப்பெற்ற ஆறு மதங்கள் வருமாறு :

சைவம் : சிவனை வழிபடு கடவுளாகக் கொண்டது. . வைணவம் : திருமாலை வழிபடு கடவுளாகக் கொண்டது.

சாத்தம் : சக்தியை வழிபடுகடவுளாகக் கொண்டது. செளரம் : சூரியனை வழிபடு கட்வுளாகக் கொண்டது.

காணாபத்யம் : கணபதியை வழிபடு கடவுளாகக் கொண்டது.

கெளமாரம் : முருகனை வழிபடு கடவுளாகக் கொண்டது.

- இனி, இவையன்றி, அகச்சமயங்களாகக் கூறப் பெறும் ஆறு மதங்கள் வருமாறு : உலோகாயதம் : இது சாருவாக மதம் என்றும் கூறப்பெறும். இது, கடவுள், ஆன்மா, கர்மம் இவையெல்லாம் இல்லை என்பதும், உலகமே உண்மை என்பதும், உலகில் உள்ள இன்பங்கள் அனைத் திலும் பெண்ணின்பமே பேரின்பம் என்பதும் ஆகிய ஒர் இறை மறுப்பு மதம். . பெளத்தம் : தொடக்கக் காலத்திலிருந்து புத்தர்கள் பலர். அவர்களது கொள்கையும் புத்தமதம் என்றே கொள்ளப்பெற்றது. ஆனால், இறுதியில் கபிலவாஸ்து என்னும் இடத்தில் கி.மு. 578இல் தோன்றிய கெளதம புத்தர்தாம் வடிவமாகப் புத்த மதத்தை நிறுவினர் என்பர். இவரே சாக்கிய புத்தர் என்றும், இவருடைய மதம் இன்னொரு வகையில் சாங்கிய மதம் என்றும் கூறப்பெறும்

. சமணம் : இம் மதத்தினர் அருகனை வழிபடுவோர். இவர்கள்,

ஆன்மாவும், உலகமும் என்றும் உளவென்றும், இவையல்லாது இவற்றுக்கு மூல காரணனாகிய கடவுள் ஒருவர் இல்லை என்றும், இச் சமயவொழுக்கங்களைக் கடைப்பிடித்து முற்றத் துறந்து முடிவெய்துதலே முத்தியென்றும் கூறுவர். - மீமாம்சை : இம் மதத்தை நிறுவியவர், ஜைமிநி பகவான் என்பர். ஞாய அளவையை வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இம் மதம். வேதம் என்றும் உள்ளதென்றும் ஆதியந்தம் இல்லாத தென்றும், கடவுளை வேண்டாமலேயே, கருமமே பய்ன் கொடுக்கும் என்றும் கூறுவது. ** * * . . • *