பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

283

அவ்விடத்தை விட்டு இன்னம் தான் பார்க்கத் தகுந்த இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு வந்து, அவ்விடத்தில் உள்ள பிராமணர் சாப்பாட்டுக் கடையில் பக்கிரியா பிள்ளையை உண்பித்ததன்றி, தானும் தனது போஜனத்தை முடித்துக் கொண்ட பிறகு, தாம் ஒரு சத்திரத்தின் திண்ணையில் வெயில் தணிகிற வரையில் இருந்து சிரம பரிகாரம் செய்து கொண்டு, மாலை நான்கு மணிக்குப் புறப்பட வேண்டும் என்று தீர்மானித்து, பக்கிரியா பிள்ளையோடு வசதியான ஒரு சத்திரத்தின் திண்ணையை அடைந்தாள்.

அந்த அம்மாளின் அருமையான குணத்தையும், அவள் தன்னிடம் காட்டும் கரைபுரண்டோடும் வாத்சல்யத்தையும் மரியாதையையும் காணக் காண பக்கிரியா பிள்ளை தன்னை அறியாமலேயே அவளிடம் அத்யந்த பிரியமும் மரியாதையும் வணக்க வொடுக்கமும் காட்டத் தொடங்கினான். அவன் கபட சுபாவம் உடையவன் அல்லன் ஆதலால், விஷயங்களை மாற்றிப் பொய் பேசுவதில் அவன் அவ்வளவு சாமார்த்தியம் அற்றவனாய் இருந்தான். அதுவுமன்றி, தன்னிடம் யாராவது அந்தரங்கமான பிரியமும் மரியாதையும் காட்டினால், அவன் அதனால் வெகு எளிதில் கவரப்பட்டு, தானும் அவர்களிடம் அது போலவே உண்மையாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளும் சுபாவம் உடையவன். ஆகவே, அவன் நீலலோசனியம்மாளது மேலான குணங்களாலும் நயமும் உருக்கமுமான சொற்களாலும் முற்றிலும் வசீகரிக்கப்பட்டு, அவளிடம் உண்மையாகவே நடக்கத் தொடங்கினான். அவர்கள் திண்ணையில் உட்கார்ந்தவுடனே நீலலோசனியம்மாள் கரைகடந்த அன்போடு அவனை நோக்கி, “தம்பி வண்டியில் வந்தது உனக்கு அலுப்பாக இருக்கும். கொஞ்சம் இப்படியே படுத்துத் தூங்கு. மூன்று மணி சுமாருக்கு நான் எழுப்புகிறேன். மறுபடி நீ ஏதாவது ஆகாரம் பார்த்துக்கொள். உடனே புறப்பட்டுப் பட்டணம் போய்விடலாம்” என்றாள். அவள் அவ்வாறு பேசிய காலத்தில் அவளது கைவிரல்களில் அணியப் பெற்றிருந்த இரண்டு வைர மோதிரங்களும் பளபள வென்று அழகாக மின்னிக் கண்களைப் பறித்தன. பக்கிரியா பிள்ளையின் திருஷ்டி பல தடவைகளில் அந்த மோதிரங்களின் மேல் சென்று கொண்டே இருந்தன. படுத்துத் தூங்கும்படி அந்த