பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

விந்தன் கதைகள்

"எல்லா வேலையும் என்றால்... ?”

"இது என்ன கேள்வி? அடிமைக்கு ஒரு வேலை என்று உண்டா, என்ன!"

அடிமை!

இந்த வார்த்தையைக் கேட்டதும் இந்தியனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "என்ன அமெரிக்காவில் கூடவா அடிமைகள் இருக்கிறார்கள்?" என்றான் அவன் வியப்புடன்.

அவனுடைய வியப்புக்குக் காரணம் இல்லாது போகவில்லை. அமெரிக்கா ஒரு ‘குபேர நாடு ‘ என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால், அம்மாதிரி குபேர நாடுகளில் தான் ‘அடிமைகள் அதிகமாயிருப்பார்கள் என்னும் உண்மையை மட்டும் அவன் அறிந்திருக்கவில்லை!

இந்தியனின் அறியாமையைக் கண்டு நீக்ரோ சிரித்து விட்டு, ‘நீ எந்த தேசத்தைச் சேர்ந்தவன்?’ என்று திருப்பிக் கேட்டான்.

"இந்தியாவைச் சேர்ந்தவன்"

"உனக்கு அங்கே என்ன வேலை...?”

நீக்ரோ இவ்வாறு கேட்டதும் இந்தியனுக்குத் தர்மசங்கடமாய் போய்விட்டது. "நானும் உன்னைப் போல்தான்..." என்று அவன் மென்று விழுங்கிக் கொண்டே ஆரம்பித்தான்.

“என்னைப் போல்தான் என்றால்... ?"

"அதுதான், அடிமையைப் போல!" என்றான் இந்தியன்.

"என்ன! இந்தியாவில் கூடவா அடிமைகள் இருக்கிறார்கள்?” என்றான் நீக்ரோ ஆச்சரியத்துடன்.

ஏனெனில் இந்தியா ‘புண்ணிய பூமி’ என்றும், அங்கே ‘பாவி'களே கிடையாதென்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். அப்படிப்பட்ட இடத்திலும் ‘அடிமைகள்' இருக்கிறார்கள் என்ற விஷயம் அவனுக்கு முற்றிலும் புதிதாக இருந்தது!

நீக்ரோவின் அறியாமையைக் கண்டதும் இந்தியனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. அவன் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே "அடிமைகள் இல்லாத இடமே அந்த அழகான உலகத்தில் கிடையாது போலிருக்கிறது!" என்றான்.

“ஆமாம், அப்பனே ஆமாம், உலகம் பூராவும் அடிமைகள் இருக்கத்தான் இருப்பார்கள். அரசியல்வாதிகள் அவர்களுடைய