பக்கம்:புதையலும் பேழையும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 199

கொள்ளும் பயனொன் றில்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட் டவன்மார்பில்

எறிந்தென் அழலைத் தீர்வேனே'

தனது கொங்கையை அடிநரம்போடு பறித்து அவனதுமார் பில் எறிய வேண்டும். அவ்வகையிலாயினும் தன் காமக்கொதிப்பைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு துடித்துப் பாடியவள் சூடிக்கொடுத்த நாச்சியார் என்னும் ஆண்டாள். ஆண்டாள் ஒரு கன்னிப் பெண் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.

இப்பாடல் இறையுணர்வில் பொங்கிய பாடலாயினும், அவ் வுணர்வுடனே ஒரு கன்னிப்பெண் தன் காம உணர்வை வடித்த பாடலாயினும், ஒரு பருவப் பெண்ணின் நிலையில் வடிக்கப்பட்ட (ஆண்டாள் பாடல்கள் அவளது தந்தையார்பெரியாழ்வாரால்பாடப் பட்டவை என்றொரு கருத்தும் உண்டு) பாடலாயினும் இக்கருத்து பற்றிய முதல் நோட்டம் இஃது ஒர் இலக்கிய நயம் என்பதே. ஆனால், இலக்கிய நயம் என்பதோடு இக்கருத்தை முடித்துக் கொள்ளவேண்டியதில்லை. இந்த இலக்கிய நயத்திற்கும் அப்பால் ஒர் உண்மை வெளிப்படுகின்றது.

பெண்களது ஆழ்ந்த உணர்வில் வெளிப்படும் மெய்ப்பாடுகளில் மார்பைப் பற்றிய செயல் உண்டு என் ப தற்கு இதனையும் ஒர் அடையாளமாகக் கொள்ளலாம். அதனிலும் பறித்து எறியும் செயல் குறிப்பில் கொள்ளத் தக்கது.

இன்பத்தை இழந்தவெறுப்புணர்ச்சிமேலிட்டாலும், துன்பப் பெருக்கில் அவல உணர்ச்சி பீறிட்டாலும் மார்பில் அறைந்து கொள்ளலும், சிதைத்துக்கொள்ளலும் தமிழக மரபாக இருந்தது.

கண்ணகியார் பெற்ற அவலமோ கொடுமையிலும் கொடுமை" யானது. வாழ்வை நிறைவாக்கிக் கொள்ள வந்தவளுக்கு வாழ்வு அறவே அடைப்பட்டுப் போயிற்று. வாழ்வின் பற்றுக்கோடான கணவனை இழந்தாள். அவனுக்குநேர்ந்த சாவு இயற்கை நிகழ்ச்சி யன்று. நோய்ச் சாக்காடில்லை. போர்க்களச் சாவில்லை.

1. நாச்சியார் திருமொழி : கண்ணனென்னும் 8,