பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 5 I னென்றும், அவரது பாதத்தில் சூஸ்த்திரனும் வேளாளன் பிறந்தானென்றும் சிறப்பித்துக்கூறி அவரவர்கள் தொழில்கள் யாவையும் அறவாழியானே சிந்தித்து அறநெறியினின்று நடாத்தும் வழியாக வகுத்திருந்தார்கள். அத்தகைய அறநெறித் தொழிலில் பிராமணர்களாம் அந்தணர்களுக்கு அறுவகைத் தொழிலை வகுத்து வைத்தார்கள். அவ்வகை யாதெனில் நிற்கினும் நடக்கினும் படுக்கினும் கலை நூற்களை வாசித்து தங்களெண்ணத்தையும், செயலையும் நீதிவழுவா நெறியிலும், வாய்மெயிலும், நிலைக்கச் செய்து நற்சாதனமாம் இடைவிடா ஒதலிலாம வாசித்தலில் நிற்ப தொன்று. தான் புரியும் நற்சாதனங்களாம் நீதிநெறி வழுவாச் செயல்களை உலக மக்களுக்கு ஒதி வைத்தலும், பொன்ைைச, பெண்ணுசை, மண்ணுசையாம். அவாக்களை முற்று மொழித் தலாம் வேட்டுதலும், அவ்வகை பேரவாக்களின லுண்டாங் கேடுகளைக் குடிகளுக்கு விளக்கி வேட்பித்தலும், ஏழை மக்களுக்கு தானமீய்ந்து ஆதரித்தலும், உபாசகர்களாலீயும் தானங்களை தானேற்றுக்கொள்ளுதலு மாகிய அறுவகைத் தொழில்களைக் குறைவற நடாத்தி வரவேண்டியதே அந்தணர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். கூடிாத்திரியர்களாம் அரசர்களது தொழிலாவது யாதெனில், அந்தணர்களாம் மகாஞானிகளா லோதிவைத்துள்ள நீதி நுாற்களை யோதியுணர்தல், தனக்குள்ளெழுங் காம வெகுளிகளை யடக்கிக்கொண்டு வருதல், குடிகளாலுண்டாங் குற்றங்குறைகளை நிவர்த்தித்தல், தனது தேசத்திற்கும் குடிகளுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பாரந்தாங்கி யீதல் நிலையினிற்றல், படைகளுக்காய வித்தைகளையும், புஜ பல பராக்கிரம கூடிாத்திரிய சாதனங்களைக் கற்றல், பலதேச யாத்திரைச்சென்று புற தேசங்களின் சீர்திருத்தங்கண்டு தன் தேசத்தை சீர்திருத்தும் விஜயஞ்செய்தல் ஆகிய வறுதொழிலும் அரசர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். வைசியர்களாம் வாணிபர்களின் அறுவகைத் தொழில்கள் யாதெனில், மகாஞானிகளா லோதிவைத்துள்ள நீதி நெறியில் நிலைத்துக் கலைநூல்களை வாசித்துணர்தல், வாசித்த வண்ண மடங்கி காம வெகுளி மயக்கங்களினின்று விடுபடுதல், புலன்