பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 08 க. அயோத்திதாளலப் பண்டிதர் கொண்டு அரசர்களது மதியை மயக்கி தீய சாதியோரென்றும், நியாய சாதியோரென்றும் இரு பிரிவினைகளை யுண்டுசெய்து தங்களை யடித்துத் துரத்தி தங்கள் துற்சிரித்தியங்களை சகலருக்கும் விளக்கிவந்த மேன் மக்களாம் விவேக மிகுந்தோரை தீய சாதிகளென வகுத்து அவர்களை தேசத்துள் வரவிடாமலும் குடிகளிடம் நெருங்கி பேசவிடாமலும் குடிகளைக் கண்டவுடன் துார விலகி ஒடிவிடும்படியான சட்டதிட்டங்களை வகுத்துவிட்டு மிலேச்சர்களாகிய தங்களை நியாயநம்பிகள், நியாயனர், நியாய பிராமணர்களென்றும் கொடுந்தமிழ் விவேகமிகுந்த மேன்மக்க களை தீயசாதிகளென வகுத்து தேசத்துள் நுழைய யேதுக்களை செய்து வருகின்ருர்கள். இத்தகைய வஞ்சனெஞ்ச மிகுத்த மிலேச்சர் தங்களை யாரடிக்கினும் தங்களை யார் வையினும் அவைகள் யாவையுங் கருதாது சிற்றரசர்களையும், பெருங்குடி களையும், தங்கள் வயப்படுத்திக் கொள்ளும்நோக்கத்திலேயே ஊக்கமுடையவர் களாக யிருந்து இத்தேச விவேகமிகுந்தவர்களைத் தாழ்ந்த சாதிகளென்றும் மிலேச்சர் களாகியத் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் உயர்ந்த சாதிகளென்றும் ஏற்படுத்திக் கொண்டு தங்கள் சுயப்பிர யோசனத்தையே மேலெனக் கருதிச் செய்துவருஞ் செயல்களைக் கண்டுவரும் தேயத்திய மராட்ஷடக வேஷ ப் பிராமணர்களும் ஆந்திரவேஷப்பிராமணர்களும், கன்னட வேஷ ப் பிராமணர்களும் திராவிட வேஷப் பிராமணர்களும் தங்கள் சோம்பலைப் பெருக்கிக் கொண்டு வஞ்சினத்தாலும் சூதிலுைம் பொய்யாலும் சீவிக்கத்தக்க ஏதுக்களில் நின்றுவிட்டபடியால் பெளத்த தன்மத்தை சார்ந்த யதார்த்த பிராமணர்களாம் அறஹத்துக் களுக்கும், சங்கங்களிற் சேர்ந்துள்ள சமண முனிவர்களுக்கும் பெளத்தக் குடும்பிகளுள் விவேக மிகுத்திருந்த உபாசகர்களுக்கும் Ꮏ } ©Ꮈ) ❍ ↑ &öᎠ & யிடுக்கங்களுண்டாகி சத்தியதன்ம சாதனங்களும், சத்தியதன்ம போதகங்களும், சத்தியதன்ம நூற்களுமழிந்து பாழுற்று அசத்திய சாதனங்களும், அசத்திய போதங்களும் அசத்திய நூற்களுந் தோன்றுதற் கேதுவாயதன்றி இவ்வேஷப் பிராமணர்களுள் மாறுதல்களையும் வே ஷப் பிராமணர்களின் பொய் ப் போதங்களையும், வேஷப் பிராமணரது நாணமற்றச் செயல்களையுங் கண்டறிந்து குடிகளுக்குப் பறைந்துவரும்