பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

தகடூர் யாத்திரை


86 தகடூர் யாத்திரை 29. நோக்கி நகும்! தகடூர்ப் பெரும்போர் நிகழ்ந்த காலத்தில் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை கட்டிளமையும் கண்கவர் தோற்றமும் உடையவனாக விளங்கினான். கார்மேகத்தை போன்ற கருமை வண்ணத்துடன் அவனுடைய புல்லியதாடி விளங்கிற்று. பகைவர்தம் நோக்கிற்கு அஞ்சாது மேற்சென்று போரிடும் காளையைப் போன்று உரனும் சினனும் கொண்டவனாக அவன் விளங்கினான். தன்னுடைய படைகளைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் அவனுடைய தோற்றத்தைக் கண்டு பொன்முடியார் வியந்து பாராட்டுகின்றார். முனைப்படைக்கண் நிற்கும் அவனை நோக்கித் தம்முடைய வியப்பினைக் கூறவும் செய்கின்றார். "சேரமானின் கழுத்திலே வெற்றிமாலை விளங்குகின்றது. அது உழிஞைப்பூவால் தொடுக்கப்பெற்றது. தகடுரை முற்றப்போகும் அடையாள மாலை அது அதனை ஒரு கையால் பற்றியவனாக, அழகுமிகுந்த தன் தோள்களை நோக்கியபடியே அவன் பூரிக்கின்றான். "முன்னணிப் படையினை இருபுறமும் நிற்ப நோக்கிப் பூரித்தவன், அதனையடுத்துப் போருட் கலந்துகொள்ளத் திரண்டு வந்திருக்கும் தன்னுடைய யானைத் திரளையும் நோக்குகின்றான். - "யானைத் திரளுக்குப் பின்னாகத் தேர்வீரர்கள் பலரும் திரண்டிருக்கின்றனர். அவர்களைக் கண்ணோட்டமிட்டும் இரும்பூது எய்துகின்றான். அவர்களுக்குப் பின்னால், குதிரைப்படை வீரர்கள் விளங்குகின்றனர். அவர்கட்குப் பின்னால் வில்வீரர்கள் விளங்குகின்றனர். அவர்கட்குப் பின்னால் வேல்வீரர்கள் திகழ்கின்றார்கள். "ஒவ்வொரு பகுதியினரையும் பார்த்துத் தன்னுள்ளத்தே வெற்றி தனக்கேயென்று உறுதிகொண்ட பின், தன்னுடைய பறை கொட்டுவோனை நோக்கிச் சிரிக்கின்றான் அவன். அந்தச் சிரிப்பு, படைகள் மேற்செல்லுமாறு நின்கிணைப் பறை முழங்கத் தொடங்குக எனத் தனக்கு இட்ட ஆணையாகும் என்பதனை உணர்ந்த கிணைவனும், கிணையைக் கொட்டத் தொடங்குகின்றான். படைகள் செல்லத் தொடங்குகின்றன. படை செல்லும் ஆரவாரமும் எழுகின்றது. - கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் தார்ப்பற்றி யேர்தருந் தோள்நோக்கித் - தார்ப்பின்னை