உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டவணை பேச்சு:மலரும் உள்ளம்-2.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
  • தொடக்க நிலையில் பக்க எண்கள் இல்லை.
  • 52,100 வெற்றுப் பக்கமாக உள்ளது.
  • 56,94,95 ஆகிய பக்கங்கள் விடுபட்டுள்ளன.
  • 20,37,85,116,149,214 [(pdf) மொத்த எண்வரிசையில் உள்ளவை] அத்தியாயப் பகுதிகளின் தொடக்கமாக உள்ளவை. இவற்றுக்கு பக்க எண் இல்லை. எனினும் முன்னர் உள்ள பக்கவரிசை தொடர்கிறது.--TVA ARUN (பேச்சு) 10:06, 2 மார்ச் 2021 (UTC)

வெற்றுப் பக்கங்களில் வர வேண்டிய பனுவல்கள்

[தொகு]

பக்கம் 52:

பிள்ளை என்றே உன்னை நான்
பிரியமாக அழைக்கிறேன்
கிள்ளிக் கிள்ளிப் பழங்களைக்
கீழே எனக்கும் போடுவாய்.

காண்க : பக்கம்: 52

பக்கம் 100:

பட்டுப் போலே அழகாய்
புல் படர்ந்திருக்கும் தரையில்
விட்டுப் போக மனமே இல்லை
மிகவும் நல்ல தோட்டம்.

காண்க : பக்கம்: 100

TI Buhari (பேச்சு) 11:00, 3 நவம்பர் 2024 (UTC)Reply

விடுபட்ட பக்கங்களில் வர வேண்டிய பனுவல்கள்

[தொகு]

@Info-farmer: @Balajijagadesh: ஆகியோரின் மேலான கவனத்திற்கு
விடுபட்ட பக்கங்களுக்கான வெற்றுப் பக்கங்கள் பொருத்தமாகச் சொருகப்பட்டால், பனுவலைப் பொறுத்த மட்டில், நூல் முழுமை பெறும். விடுபட்ட பக்கங்களின் அச்சுப் பிரதி கிடைக்கப் பெறும் போது, வெற்றுப் பக்கங்களை நீக்கி விட்டு, அச்சுப் பிரதிகளை மாற்றி விடலாம்.

பக்கம் 56:
எங்கள் மொழி — பள்ளிக் கூடப் பை & மலர்கள் இவற்றுக்கு இடைப்பட்ட பாடல் [நூலின் அட்டவணையில் இருந்து]

எங்கள் மொழி நல்ல மொழி.
இனிமையாகப் பேசும் மொழி.

அன்னை சொல்லித் தந்த மொழி.
அன்பொழுகப் பேசும் மொழி.

பள்ளி சென்று கற்ற மொழி.
பக்குவமாய்ப் பேசும் மொழி.

நண்பர் கூடிப் பழகும் மொழி.
நயமுடனே பேசும் மொழி.

நாள் தோறும் உதவும் மொழி.
நல்ல தமிழ் எங்கள் மொழி.

மூலம் : எங்கள் மொழி

பக்கம் 94:
இறகு 2ம் பக்கம்— “இறகு” என்ற பாடலின் முதல் பக்கத்துக்கும் “அதிசய வீடு” என்ற பாடலுக்கும் இடைப்பட்டது. [நூலின் அட்டவணையில் இருந்து]

பார்க்கப் பார்க்க அழகுதான்
பளப ளக்கும் இறகுதான்.

பட்டுப் போல இருக்குது.
   பவுனைப் போல மின்னுது.
விட்டுச் சென்ற பறவையே
   விரும்பிக் கேட்டால் தருகிறேன்.

பார்க்கப் பார்க்க அழகுதான்
பளப ளக்கும் இறகுதான்.

அரசர் போலத் தலையிலே
   அணிந்து கொள்ள ஆசைதான்.
உரிமைக் காரர் கேட்டிடின்,
   உடனே தந்து விடுகிறேன்.

பார்க்கப் பார்க்க அழகுதான்
பளப ளக்கும் இறகுதான்.

மூலம் : இறகு-2ம் பக்கம்

பக்கம் 95:
அதிசய வீடு — “இறகு” என்ற பாடலின் 2ம் பக்கத்துக்கும் “சிறு விளக்கு” என்ற பாடலுக்கும் இடைப்பட்ட பாடல் [நூலின் அட்டவணையில் இருந்து]

வீட்டை முதுகில் தூக்கிடுவார்.
   மெல்ல மெல்லச் சென்றிடுவார்.
ஆற்றில் நீந்தி வீட்டுடனே
   அக்கரை கூடச் சேர்ந்திடுவார்.

இரும்பைப் போன்றது அவர்வீடு.
   எவரும் அசைக்க முடியாது.
குறும்புச் சிறுவர் கல்எறிந்தால்
   கொஞ்சமும் உடைய மாட்டாது.

காற்றில் கூரை பறக்காது.
   கனத்த மழையில் ஒழுகாது,
ஓட்டு வீடே ஆனாலும்,
   ஒருவர் தானே வசித்திடலாம்.

யார் வீடு?

ஆமாம், அந்த வீடு
   யார் வசிக்கும் வீடு?
ஆமை முதுகு ஓடு.
   அதுவே அதற்கு வீடு!

மூலம் : அதிசய வீடு

TI Buhari (பேச்சு) 12:00, 3 நவம்பர் 2024 (UTC)Reply