பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

29

பல புதுச் செய்யுட்களையும் பாடிச் சேர்த்து, 600 செய்யுட்கள் கொண்ட தனி நூலாக உரையுடன் செப்பஞ் செய்தனர் இது வேதகிரியார் சூடாமணி என வழங்கும்

சூடாமணி நிகண்டைப் போலவே, பன்னிரு தொகுதியும் உடைய நூல்களைச் செய்து, 11ஆம் தொகுதியில் பலவகையான முற்போக்கு முறைகளைப் பலர் கையாள முயன்றனர் இவ்வகையில் எழுந்த நிகண்டுகளில் முதலில் கூறத்தக்கது உரிச்சொல் நிகண்டு இது சிறு நூலாய் வெண்பா யாப்பில் உள்ளது இதில் பல் பொருட் சொற்கள் வெண்பாவில் அமைதற்குத் தக்கபடி கொள்ளப்பட்டுள்ளதே தவிர, வேறு சிறப்பாகச் சொல்லத்தக்க இயல்பு எதுவும் இல்லை கயாதர நிகண்டு கட்டளைக் கலித்துறைச் செய்யுளால் அந்தாதியாக அமைந்துள்ளது. இதனால் இது சூடாமணியினும் சிறந்த அமைப்புடையது என்று கொள்ளலாம் இதன் பின்னர்த் தோன்றிய பாரதி தீபம் கட்டளைக் கலித்துறைச் செய்யுளால் அமைந்ததாயினும், அடைமொழியின்றிப் பெயர்களை அமைத்தும் பொருட்பெயர்களை மிகுதியாகத் திரட்டித் தொகுத்தும் செம்மையுற அமைந்துள்ளது ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு அடிமிக்க ஆசிரிய விருத்தத்தால் அமைந்து, பொருட் பெயர்களையும் மிகுதியாகக் கொண்டு, எளிய நடையில் அமைந்துள்ளது பதினோராந் தொகுதியில் சொற் பொருள்களை எண்ணால் வரையறுத்து உணர்த்தி யிருத்தல் இதன் தனிச் சிறப்பாகும்

இவ்வாறு அமைந்த எதுகை முறை முதலியவற்றால் சொற்பொருளை எளிதில் கண்டு பயன்படுத்த இயலாது என்று கருதி, நிகண்டுகளில் பின்னர் அகராதி முறையை மேற்கொள்ளலாயினர் இவ்வகையில் எழுந்த முதல் நூல் புலியூர்ச் சிதம்பர ரேவண சித்தர் இயற்றிய அகராதி நிகண்டு அகராதி என்ற பெயரைத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும் பெயருக்கு ஏற்ப இது அகராதியாகவே அமைந்துள்ளது இதில் முதல் எழுத்து மட்டும் அகராதியில் உள்ளதே