பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

செந்தமிழ் பெட்டகம்

வித்தை ஆபத்துக்குதவாமற் போம் என்ற சபித்தார் இரப்போர்க்கு இல்லையென்று சொல்லும் குணமுடைய வனல்லன் கன்னனென்றறிந்து இந்திரனும் இயற்கையாயுள்ள அவன் கவச குண்டலங்களை அந்தணர் வடிவங் கொண்டு வந்து இரந்து பெற்றுச் சென்றான் அதற்குப் பதிலாகச் சத்தியொன்றை இந்திரனிடமிருந்து பெற்று, அருச்சுனனைக் கொல்வதற்கென்று அதைக் காப்பாற்றி வந்த கன்னன் பாரதப் போரில் கடோத்கசன் என்ற அரக்கனைத் தாக்கி வீணாக்கினான் யுத்த ஆரம்பத்தில் குந்தி கன்னனைக் கண்டு, ‘நீ என் மகன்’ என அறிவிக்கவே, பாண்டவர் மீது கொண்டிருந்த அவனுடைய பகைமைப் பண்பு இளகிப்போயிற்று. பீஷ்மரும் துரோணரும் அசுவத்தாமனும் அவன்மீது பொறாமை கொண்டு, அவனை இடைவிடாமல் இகழ்ந்துபேசி, அவன் கொண்டிருந்த வீரச்செருக்கையும் உற்சாகத்தையும் பங்கப்படுத்தினார்கள் யுத்த காலத்தில் பீஷ்மர் ரதிகர்கள் பதவியைத் தீர்மானித்தபோது கன்னனை அர்த்த ரதன் என்று கணக்கிட்டார் அவன் சாரதியான சல்லியனும் அருச்சுனன் அன்னம், நீ காக்கை எனக் கூறித் தேசிழக்கச் செய்தான் நினைப்பதற்கு வெகு துக்ககரமான இவன் வாழ்வு பாரதத்தின் துன்பியல் தன்மைக்கு உணவளிப்பதுபோல் ஆயிற்று

பாரதத்தின் இலக்கியச் சிறப்பெல்லாம் கிருஷ்ணர் அருக சுனனுக்குப் பாடிய கீதையில் முடிசூடப் பெறுகின்றது எல்லா உபநிஷத்துக்களும் பசுக்கள்; அருச்சுனன் என்ற கன்று அவைகளை ஊட்டிப் பால் சுரக்கச் செய்கிறது; அப்பாலைக் கிருஷ்ணர் என்ற இடையர் கறந்து, உலகம் உய்யும் பொருட்டு அதற்கு விநியோகித்தார்’ என்ற அதன் பெருமை வருணிக்கப் படுகின்றது

அர்ச்சுனனால் வீழ்த்தப்பட்டவுடன் அவனியிலே படுக்காமல் அம்புப் படுக்கையிலேயே படுத்து, உத்தராயணத்தைத் தம் இறுதிக்காக எதிர் பார்த்திருநத பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு உபதே சித்தவை சாந்தி,