பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

செந்தமிழ் பெட்டகம்

படுத்துகின்ற முறையில் நான்கு ஆற்றுப்படைகள் பத்துப்பாட்டில் அமைந்துள்ளன

பத்துப்பாட்டில் இரண்டாவதாகிய பொரு நராற்றுப் படை முடத்தாமக் கண்ணியார் பாடிய பாட்டு பாட்டு ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது 248 அடிகள் கொண்ட இந்த ஆசிரியப்பாவில் வஞ்சியடிகளும் இடையிடையே வருகின்றன, கொலைஞரையும் கள்வரையும் திருத்தும் யாழின் இனிமையில் ஈடுபட்டு, மணப்பெண்போல் அது விளங்குவதாகக் கொண்டு, அதனை மீட்டுகிற பெண்ணை, அதற்கேற்ப அழகே உருக்கொண்டது போல் ஒளிர்கின்ற நிலையில் வைத்து, அவள் கையில்யாழினைக் காண்கின்றார் புலவர், அழகிய பெண்ணின் புனைந்துரையும் அங்கே எழுகின்றது கலையின் வாட்டம் புண்பட்ட அழகின் வாட்டமா வதனை நிழலுக்கும் பஞ்சமான காட்டிடையே புலவர் காட்டுகின்றார் ஆனால், கலையோ மூவேந்தரும் ஒன்ற கூடியதுபோலத் தன்மான வீறுகொண்டு விளங்குகின்றது

புரவல்னைக் கண்டபின் பட்டினியால் வாடுகின்றவர்களுக்கு உணவு வருமென்று கூறவேண்டும் ஆனால், கலைஞனைச் சாப்பாட்டு ராமனாக்க விரும்பாத இந்தக் கலைஞனது உள்ளம், தான் உண்ட உணவின் பெருமையை எல்லாம். தன்னுடைய தனியின்பமாகப் பாடிக்கொண்டு போய்க் கேட்போன் மனத்தில் பதியச் செய்கின்றது விருந்தினைப் பாட்டாகப் பாடிப் புகழ் பெற்றவர் மலையாளக் குஞ்சன் நம்பியாருக்கு முன்னே கண்ணியர் ஒருவரே எனலாம் பின்னர்த் தான்கண்ட புரவரனாம் கரிகற் பெருவளத்தானின் பெருமையும் வீரமும் பரிசில் வழங்கும் வள்ளன்மையும் கலைஞரைப் பிரிவதற்கு அஞ்சி வாடும் அவன் அன்புள்ளமும் கேட்போர் மனத்தில் இனிக்க இனிக்க உரைக்கின்றான் பொருநன் ஏழைப் பொருநன் அவனிடம் சென்றதும், அவன் செய்யப்போகும் பாராட்டினை எல்லாம்