பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி



மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
சேந்தனை செலினே திதைகுவது உண்டோ? -
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!

- இம்மென்கீரனார் அக 398

“கரைமீது புரண்டு வரும் வெள்ளம் பொருந்திய ஆறே! பெரிய ஆண் புலி தாக்கியதால் புண் மிகுந்து, வருந்தும் பெண் யானையால் தழுவப்படும் வலி குன்றிய ஆண் யானை வளைவான மூங்கிலால் செய்த தூம்பு என்ற ஊது கருவியைப் போன்று ஒலிக்கும் எம் தலைவரின் மலை நாட்டினின்றும் இழிந்து வருவோய்

அணிகள், கழல்வதற்குக் காரணமான துன்பம் மிக, நினைவு மிக்க வருத்தத்துடன் பலவற்றையும் வெறுத்துக் கூறித் தங்கி மென்மையான தோல் மெலிய வருந்திக் கொன்றை மரத்தின் மலர்ந்த மலரைப் போலப் பாழாய் படர்ந்த பசலையையுடைய என் மேனியைப் பார்த்து, நெற்றி, பசலை படரப் பெற்ற இத் தன்மை கொண்டவராய் உள்ளோம் இத்தகைய எம்மைப் பார்த்து அருள் செய்யானாய் உன் தலைவன் செய்த வன்மைக்குக் கலங்குகின்ற கண்களினின்றும் நீர் விரைவாகப் பெருகவும், அறத்தைக் கைவிடல், குன்று பொருந்திய நாட்டையுடைய உன் தலைவனுக்கு இச்செயல் என்ன என்று உலகத்தவரால் சொல்லப்படுமோ! உரைப்பாயாக எனச் சொல்லி உன்னுடன் நான் பிணங்குவேன் என்று அஞ்சி மலையில் உள்ள பல பூக்களையும் போர்த்துக் கொண்டு நாணத்தால் மிகவும் ஒடுங்கி மறைந்து நீங்கும் உன்னை மட்டும் எம் ஊர் வழியே அனுப்பிவிட்டு, ஏதிலாராகிய அவர் அறமின்றித் துறத்தற்கு வன்மை வாய்ந்தவர் ஆவர் என்பது தெளிவு.

அதனை நோக்காது தீயைப் போன்ற மலர்கள் நிறைந்த கிளையையுடைய வேங்கைமரத்தின் நிழலில் நின் ஓட்டத்தைத்