உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

செந்தமிழ் பெட்டகம்


ஒவ்வொரு சருக்கத்தின் இறுதியிலும் கவி தம் தாய் தந்தையரைப் பற்றியும், தாம் இயற்றிய மற்றக் காவியங்களைப் பற்றியும் கூறாக்கொள்ளுகின்றனர். இக்காவியத்தின் நடை மிகக் கடினமானது. பல நிகண்டுகளைக் கற்ற கவி, அவற்றிலுள்ள சொற்களை மிகுதியாகக் கையா ளுகின்றார். அவர் பல சாத்திரங் களையும் கற்றறிந்தவராதிலின் அவற்றின் பொருளை ஆங்காங்கே பதித்திருக்கின்றார். ஆதலால் இந்நூல் நச்சினார்க்கே இனிமை பயப்பதாகும். “நைடதம் வித்துவான்களின் ஒளடதம்” என்பது கவிஞர் கூற்று.

வரலாற்றுக் காவியங்கள் :

சமஸ்கிருத மொழியில் வரலாற்று நூல்கள் அதிகமாக இல்லாமற் போனாலும், ஆங்காங்கு அரசர்களுடைய வாழ்க்கை வரலாற்றைக் குறித்து எழுதப் பெற்ற காப்பியங்களிலோ, கவிகளால் அவ்வரசர் களைப் போற்றி எழுதப்பட்டிருக்கும் அலங்கார நூல்களிலோ வரலாற்று நிகழ்ச்சிகளை ஒட்டிய இலக்கியம் ஒரளவு காணப்படுகிறது.

பல்வேறு பண்டை அரச மரபுகளின் தோற்றம், அவர்களுடைய வரலாறு முதலியவைகளைப் புராணங்களிலுள்ள அவற்றின் பாகத்தில் காணலாம். கல்வெட்டுக்கள், அவற்றை நிறுவிய அரசருடைய முன்னோர்கள், அவர் காலம் முதலிய வரலாற்று விவரங்களைக் கூறுகின்றன. ஹரிஷேணர், வத்ஸபட்டி முதலியவர் எழுதிய பிரசஸ்திகள் பண்டைய வரலாற்றாராய்ச்சிக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. இவை கல்வெட்டுக் களானாலும் காப்பிய முறையிலேயே அமைந்திருக்கின்றன. இப்படி இதிகாச புராணங்களிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும் வளர்ந்ததே வரலாற்றுக் காப்பியம்.

வரலாற்றையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற காப்பியங்கள் சில சமஸ்கிருதத்தில் காணப்படுகின்றன. ஏழாம் நூற்றாண்டில் கான்ய