உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

99


சீனா :

சீனாவில் நாடகம் தோன்றியதிற்குக் காரணமாயிருந்தவர் சுங் அரச வமிசத்தினரை வென்று அரசாண்ட மங்கோல் அரசர்களாவர் (1727) இவர்கட்கு முன்னர், பொம்மலாட்டமே சிறந்திருந்தது. மங்கோலிய அரசர்களான கான்கள் நாடகத்தை ஆதரித்தனர். ஐம்பது ஆண்டுக் காலத்தில் சுமார் ஐந்நூறு நாடகங்கள் எழுதப் பெற்றன. அவற்றுள் நூறு மிகச் சிறந்தனவாகக் கொண்டாடப்படுகின்றன. சில ஐரோப்பிய மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் மேலைமனைக் காதல் என்பது மிகுந்த புகழ்பெற்றது.

மேனாட்டு நாடகவியலை வைத்து ஆராய்ந்தால், இந்த நாடகங்கள் குறைபாடுடையனவே. இவற்றில் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் காணப்படும் உச்சநிலை, நீசநிலை முதலியன காணப்படுவதில்லை. ஆயினும் அவற்றின் மொழிநடை உள்ளத்தைக் கவரும் தன்மையுடையது. இசை போல் இனிப்பது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். i

இந்த நாடகங்கள் எழுந்த 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை நானூறு ஆண்டுகள் சீன நாடகம் ஒழுங்காக வளர்ந்து வந்தது. இந்தக் காலத்தில் இயற்றப் பெற்ற நாடகங்கள், வடமுறை நாடகங்கள், தென்முறை நாடகங்கள் என்று இரண்டு வகையின. வடமுறை நாடகங்கள் வரலாற்று விஷயங்களையும் இயற்கையை மீறிய விஷயங்களையும் பொருளாகவுடையன. தென்முறை நாடகங்கள் பெரும்பாலும் காதற்கதைகளை அடிநிலையாக உடையன. இரண்டு முறை நாடகங்களும் கவிதைச் சுவை மிகுந்தவை. இந்த நாடகங்களில் சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

18 ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த கவிஞர்கள் என்று புகழ் பெற்றவர்களுள் ஒருவரான சியாங் ஷிஹ்