உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

செந்தமிழ் பெட்டகம்


சிம்ஹாசன த்வாத்ரும்சிகா :

இதற்கு விக்கிரம சரிதம் என்னும் பெயர் உண்டு. போஜன் காலத்தில் (1018-60) வரைந்த நூல் இதுவாகும். விக்கிரமாதித்தனுடைய 32 படிகள் உள்ள சிம்மாசனத்தில் ஏற வந்த போஜனைப் பார்த்து, அப் படிகளிலுள்ள பதுமைகள் கூறுவது போன்று இவை அமைக்கப்பட்டுள்ளன.

சுகசப்ததி :

கணவனைப் பிரிந்த காரிகை ஒருத்தி வேறு புருஷனைக் காதலிக்க, அவளைப் பார்த்து ஒரு கிளி ஒழுங்கு தவறுவதால் உண்டாகும் இன்னல்களை 70 கதைகள் மூலமும், 70 இரவுகள் சொல்லி தடுத்ததாகவும், அவளுடைய புருஷன் மறு நாள் வந்து விட்டதாகவும் இக்கதை அமைந்திருக்கிறது. இது உரைநடையில் உள்ளது, எழுதியவர் தெரியவில்லை. ஹேமச்சந்திரர் என்பவர் இந்த நூலைப் பற்றிக் கூறியிருத்தலால் இதன் காலம் சுமார் 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு என்று கூறுலாம்.

விக்கிரமாதித்தன் கதைகள் போல் சூத்ரக மன்னன் கதைகளும் உண்டு. அவற்றைக் கூறுவது அனந்தகவியின் வீர சரிதம், 14 ஆம் நூற்றாண்டில் மிதிலையில் புகழ் பெற்ற கவியாயிருந்த வித்தியாபதி என்பவர் புருஷ பரீஷை என்று 44 கதைகளான கதை நூலை இயற்றினார். கவிகளையும் காவியங்களையும் பற்றிய நிகழ்ச்சிகளைக் கூறும் கதை நூல்களில் மிகவும் நன்றாய்த் தெரிந்த பல்லால கவியின் போஜப்பிரபந்தம், ஜைனகவிகளான மேருதுங்கனும், இராஜசேகரனும் எழுதியவை பிரபந்த சிந்தாமணியும் பிரபந்தகோசமும்ஆகும். கதாகெளதுகம் என்றது 15 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவரன் பாரசீக மொழியிலிருந்து எழுதிய கதை நூல். அராபியக் கதைகள் என்ற கதைகளும் அண்மையில் 'ஆரப்ய யாமினீ ' என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டன.