234
செந்தமிழ் பெட்டகம்
ஜன்ம தினம் முதலியவை. பிற்காலத்தில் எழுதிய கவிதைகளில் இவர் எதுகை, மோனைகளையே முக்கியம் என்று கருதாமல் ஒசைக்கும் கருத்துக்குமே முதலிடம் கொடுத்தார்.
இவருடைய சிறுகதைகள் உலகச் சிறுகதை இலக்கிய வரிசையில் முன்னணியில் இருப்பவை. பல வகையான கதைகளைப் பல சந்தர்ப்பங்களில் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானவை: கல்பகுச்ச (கதைக் கொத்து), லிபிகா, தின்சங்கி (மூவர்) முதலியவை.
நாவல்களில் குறிப்பிடக் கூடியவை : கோரா (கெளர மோகனன்), நெளகாடுபி (படகு மூழ்கினது), துயிபோன் (இரு சகோதரிகள்), மாலஞ்ச (பூந்தோட்டம்), சோகேர் பாலி (கண்ணெரிச்சல் வலி அல்லது விநோதினி), சார் அத்தியாயம் (நாலு அத்தியாயம்), பெளடாகு ராணிர்ஹாட் (மருமகன் ராணியம்மாளின் சந்தை), ராஜரிஷி முதலியவை. கோரா இந்தியனாகவே வளர்ந்த ஓர் ஐரோப்பியனைப் பற்றிய கதை. இந்த நாவல்களின் மூலம் வங்க சமுதாயத்தில் காணும் பல குறைகளைப் போக்க முயன்றிருக்கிறார் ரவீந்திரர்.
நாடகங்களில் முக்கியமானவை : சித்திராங்கதா, மாலினி, ராஜா, விஸர்ஜனம் (பலிதானம்), பால்குன (பங்குனி), சந்நியாசி, சண்டாளிகா, நடிர்பூஜா (நடிகையின் வழிபாடு), தபதி, விதாய் அபீசாப (விடை பெறும் போது பெற்ற சாபம்), ரக்தகரபி (செவ்வலரி), டாககர் (தபால் ஆபீசு), முக்ததாரா முதலியன. பிரகசனம் என்ற கேலி நாடக வகையில் குறிப்பிடக்கூடியது இவரது சிரகுமார சபா. அருச்சுனன் தீர்த்தயாத்திரையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது சித்திராங் கதா. மாலினி, முக்ததாரா, சண்டாளிகா, நடிர்பூஜா இந்த நான்கும் பெளத்த காலத்து நிகழ்ச்சி பற்றியவை. விஸர் ஜனம் என்பது திரிபுரா ராச்சியத்தில் அரசன் உயிர்ப் பலியை நிறுத்தியது பற்றிய உருக்கமான