உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

'ஏற்றத்தாழ் வின்றிப் பேசற்
கிரண்டற இணைந்த நெஞ்சம்
மாற்றந்தா னின்றி வாழ்வில்
மனைமாட்சி கமழ்தல் மன்னிப்
போற்றுத லுற்றிந் நாட்டில்
புகழுற்றுப் பொலிக' வென்றே
நேற்றுந்தா னின்றுந் தானென்
நினைவொன்றி நின்ற தன்றே!

மலைவாயில் புக்கான் வெய்யோன்;
மாலையை மகிழ்ச்சி யாக்கத்
தலைவாயில் புக்காள், இல்லத்
தலைவியும்; தணலாய்ப் பற்றி
உலைவாயில் புக்கா னெங்கள்
உணவுக்காய் நெருப்புத் தேவன்!
கலைவாயில் கட்டிக் கானல்
கவின்வாயில் புக்கேன், நானே!