உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்



காற்று மழைவரின் கீற்றுக் குடிசைநட்
டாற்றில் விடுமேயென்'பாள்; அவன்
'ஆற்று மணலிடை தோற்றும் நிலவினில்
ஆனந்தம் காண்போமென்'பான்.

'செம்புத்தண் ணிரன்றிக் கும்பிப் பசிக்கின்று
செய்குவ தென்னவென்'பாள்; - அவன்
'தும்பிகளாய்த்தமிழ்க் கவிதை மலரில்
துதைந்து புசிப் போ' மென்பான்.

108