கவியகம், வெள்ளியங்காட்டான்/நிலைபேறு
Appearance
நிலைபேறு
’ஆண்டவ’ னென.இனி வேண்டிய தெதுவோ?
அன்னையை மகவினைப் பின்னிய தெதுவோ?
ஈண்டுமெய் யறிவினைத் துாண்டுவ தெதுவோ?
என்பிறப் பிணித்திடற் கினிமருந் தெதுவோ?
- அதைப் பெறுவதற்கினி
- ஆசையு றேனோ!
- அதைப்பெறு வதற்கினி
- ஆசையு றேனோ!
துன்பமென் பதையெது துடைத்திடற் காமோ?
தூய்மையும் வாய்மையு மெதற்குற வாமோ?
இன்பமென் பதையெது படைத்திடற் காமோ?
இன்மையி லமைதியை யிணைப்ப தெதாமோ?
- அதைப்பெறு வதற்கினி
- ஆசையு றேனோ!
- அதைப்பெறு வதற்கினி
- ஆசையு றேனோ!
சத்தியில் வுலகினில் சாற்றிய தெதுவோ?
சமரச நெறிமுறை போற்றிய தெதுவோ?
சித்திரைச் சிந்தையி லேற்றுவ தெதுவோ?
சீவனைத் தேவனாய் மாற்றுவ தெதுவோ?
- அதைப்பெறு வதற்கினி
- ஆசையு றேனோ!
- அதைப்பெறு வதற்கினி
- ஆசையு றேனோ!