உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்

பி.எஸ். ராஜமய்யர், பி.எஸ். ராமையா ஆகியோரிடம் விசேஷமான அபிமானமும் அவருக்கு இருந்தது.

இலக்கியத் தகுதி பெற்ற நாவலான 'கமலாம்பாள் சரித்திரம்' எழுதிய பி.எஸ். ராஜமையரின் பெருமையை வத்தலக்குண்டு ஊர்வாசிகள் சரிவர அறிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் செல்லப்பாவுக்கு உண்டு. எனவே, நாவலாசிரியரின் பெருமையை சொந்தஊர்க்காரர்களுக்கு உணர்த்துவதற்காக, ஒருவருடம் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்தார் செல்லப்பா. பெயர் பெற்ற எழுத்தாளர்கள் பலரை சென்னையிலிருந்து வத்தலக்குண்டுக்கு வரவழைத்து, ராஜமய்யர் பெருமைகளையும் சிறப்புகளையும் பேசும்படி செய்தார். நா. பார்த்தசாரதி, வ.க, , தி.க. சிவசங்கரன், கோமல் சுவாமிநாதன், நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் கலந்து கொண்ட அவ்விழா முக்கியத்துவம் பெற்றதாயிற்று. ‘ராஜமய்யர் வாழ்ந்த இல்லம்’ என்ற கல்வெட்டும் ஒரு வீட்டில் பதிக்கப்பட்டது.

7