உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

வந்தது அருளால்.
மண்ணெண்ணை வர்ணம்
இரண்டுதான் என்றாலும்
மஞ்சளும் வெளுப்பும்
என்றாலும் பலபேர்கள்
கறுப்பென்று கதறினர்.
தம்படி நாணயம்
இல்லாமல் போனதும்
முதலுக்கு மோசம்
அணுகாத வேலியாய்,
உயிருள்ள அரணாய்
உவந்திட முளைத்தது.
அங்கயற்கண்ணி
அடிகளே சரணம்!

தம்பிடி மிச்சத்தைக்
கேட்ப்பவரில்லை.
சில்லரைப்போருக்கு
வருவோரும் இல்லை,
அங்கையற்கண்ணியின்
அலையோடும் அருளால்
எண்ணைக்குப் பின்னர்
அரிசிக்கும் பங்கீடு.
தானாகத் தங்கம்
தடத்தில் கிடைத்தால்
ஓடென்றொதுக்க நான்
பட்டினத்தாரோ?

மீன்கொத்தி ஒன்று
உள்ளே இருந்ததால்
பங்கீடுகடை ஒன்று
பட்டென்று வைத்தேன்.
பணக்காரன் ஆனேன்.
பங்கீட்டுக் கடைகளால்

40