உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4




உற்றுழி யுதவி யாய்த்தன்
னுடனெட்டி யொழுகும் புல்லின்
சொற்றுளி யளவிற் றேனும்,
‘சுருக்கெ’னத் தைக்கச் சோர்ந்தே
‘எற்றிழி வொழித்து நானிங்
கேற்றமுற் றிருப்ப’ தென்று
சிற்றுளி பட்ட கல்போல்
சிந்தைசீ ரற்ற தன்றே.

திட்டமா யோர்ந்து வந்து
தெரிவித்த புல்சொல் தேரின்.
‘விட்டமா யிருக்கத் தக்க
விதியின்றி, விளங்கும் வீட்டுச்
சட்டமா யிருக்கக் கூடச்
சத்தின்றிச் சார்ந்த சன்மம்
மட்டமாய் விட்ட’ தென்றே
மனம்வெந்து மாழ்கிற் றன்றல் !