==வில்லன் பொன்னப்பன்
15
==
பொழுதுகோ லங்கொண் டன்று
பூத்திடப் புகழ்ந்து குந்தி,
விழுதுகோ லங்கொள் ளாலின்
விருத்தாந்தம் விளங்கச் செய்தற்
கெழுதுகோல் கையிற் கொண்டென்
னிதயத்தை யியக்குங் காலிக்
கழுதுகோ லங்கொள் பொன்னன்
கடிநாயாய்க் காட்சி தந்தான்.
“அரும்பெனும் பருவம் மாறி
அழகுப்போ தெனம லர்ந்த
கரும்பினைக் கைப்பிக் கும்சொல்
கன்னியைக் கவரக் கற்ற
சுரும்பெனும் விதம்நீ யூரில்
சுதந்திரச் சூரன் மாயா!
நிரம்பின மீன்சூழ் வான்கண்
நிகரிலாப் பிறைநேர்ந் தாற்போல்!
அச்சிலே வார்த்த மைத்த
அழகன்நீ யாக வேதம்
கச்சிலே மறைத்து வைத்த
கவின்கோங்கு மலர்மேல் காணக்
குச்சிலே கோலங் கொண்ட
குமரியும் கொள்வ துன்னை!
மச்சிலே கோலங் கொண்ட
மங்கையும் மதிப்ப துன்னே!
தோற்றமொன் றிதுயில் வூரில்
தோகையர் கண்ணில் தோன்றும்!
தேற்றமொன் றிதுசொல் தேனய்த்
தெரிவையர் செவியில் சேரும்!
ஏற்றமொன் றிதுவே மாதர்
இதயத்தில் பதியும்! ஏத்திப்
போற்றுமுன் புகழொன் றென்னைப்
புழுக்கு தின் றெ”ன்றன், பொன்னன்.