உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17



‘கண்டதை யெல்லா மூன்றிக்
கசடறக் கற்போ ரெல்லாம்
பண்டித ராவா’ ரென்னும்
பழமொழி தனைநான் பற்றிக்
கொண்டதும் துறந்து, கூட்டிக்
கொள்வதும் மறந்து போய்நற்
றண்டமிழ் நூல்க ளில்தான்
தலைநுழைத் துக்கொண் டுள்ளேன்.

‘உத்தம’ னென்றிவ் வூரார்
உளங்குளிர்ந் துரைப்ப தொன்று;
‘வித்தக’ னெனவேற் றுாரார்
விரும்பியே வியப்ப தொன்று!
புத்தகம் புகலாய்க் கொண்டென்
பொழுதெலாம் போக்கு கின்றேன்,
‘பித்த’னென் றயா பேசிப்
பேதுற்று நோகு மாறே!

குலந்தரும் கல்விச் செல்வம்
கூடாத குச்சில் தோன்றி,
நிலந்தரும் நெல்,புல் செல்வம்
நேராத நிலையில் நின்று,
புலந்திரன் களவு மாலை,
பொலிவான சேவல் பாட்டு,
நலந்தரும் கபிலன் நல்கும்
நயமான அகவ லன்றிப்

பவளவா யிதழோ? பால்போல்
பனிமுல்லைப் பல்லோ? பார்க்கும்
குவளையாம் விழியோ? கொண்ட
கோங்கெனும் நகிலோ?-வுள்ள
எவளையு மெங்கு மேறிட்
டென்றும்நான் காணேன். ஏரித்
தவளையாய்க் கத்தி நீபொய்த்
தமுக்கடிப் பதும்த காது!