19
6. அறியாமை
ஈயையார் கேட்பார், ‘ஊர்பேர்,
என்னவோய்?’ என்றே, எங்கும்
நாயையார் வளர்த்தா ரோஅந்
நாயவர் நாய்தான்! நானும்
தாயையா ரென்றே, தந்த
தந்தையா ரென்றே வோரேன்!
ஆயையார் வினவி னும்,‘என்
னருமைப்பே ரன்தா’ னென்பார்!
அட்டிலை மறைத்த மைத்தாங்
கருமைப்புல் லதனல் வேய்ந்த
கொட்டிலில், கறிக்கு ழம்பும்
குருமாவும், மணக்குங் கூட்டோ
டிட்டிலி, தோசை விற்றே
ஈயெறும் பணுகா துாட்டித்
தொட்டிலிட் டாட்டிக் காத்துத்
தோன்றலாய் வளர்த்தா ளாமாய்!
வாயினை வயிற்றுக் காக
வைத்துக்கொண் டுரீல் வாழ்வோன்,
தீயினைத் தொட்டால் சுட்டுத்
தீருமென் பதையோ ரானய்,
‘நாயினை நேசித் தாலும்
நலமுண்டு; நல்ல பாம்பிம்
மாயனை மட்டும் யாரும்
மதிக்காதீ’ ரென்கின் றனம்.
‘உள்ளதைச் சொன்ன லோரார்க்
குடலெல்லா மெரிச்ச’ லென்றே
தெள்ளிய தமிழில் செப்பித்
தெளிவித்தோன் கவிஞ னென்பார்.
‘நள்ளிருட் கிரங்கிப் புத்தி
நண்பகல் நவின்ற’ தென்றல்
எள்ளலைத் தவிர்த்து வேறென்
றெதிர்பார்க்க வேண்டா மன்றே?