25
கண்டுகொள் கின்ற இன்பம்,
கழறும்சொன் மதுவைக் காதில்
கொண்டுகொள் கின்ற இன்பம்,
கொவ்வையாய்க் குவியி தழ்தேன்
உண்டுகொள் கின்ற இன்பம்,
உடற்கின்பம், உளத்திற் கின்பம்,
பெண்டுகொள் கின்ற இன்பம்
பேரின்ப மன்றே?” என்றேன்.
“போதல்ல தில்லை யுள்ளம்
புளகித முறப்போ தொப்ப
வோதல்ல தில்லை, யுள்ளம்
ஒளியுற! ஒதா துள்ளோர்,
‘தீதல்ல தில்லை’ யென்னும்
தெளிவற்ற வாழ்வில், ‘காதல்
மாதல்ல தில்லை’ யென்னும்
மனத்திட்ப மெய்தி னீர்போன்ம்!
கலையிட்டுக் கண்ட காதற்
காய்நன்கு கனிந்து தின்னும்
நிலையிட்டுக் கொண்ட தாயின்
நேர்த்தியாய்ப் பசியும் நேர்ந்தால்,
இலையிட்டுக் கொண்டுண் டின்புற்
றிருக்கலா மினிநீ ரேங்கித்
தலையிட்டுக் கொண்டெங் கும்போய்த்
தவித்திட வேண்டா” மென்றள்.
சூதுசெய் கின்றே னும்‘தான்
சுத்தசன் மார்க்க’ னென்றே
வாதுசெய் கின்றே ய்னவாழ்
வையகந் தனிலே, வந்திம்
மாதுசெய் கின்ற தெல்லாம்
மடமையோ? மாண்போ? மாறய்
‘யாதுசெய் கின்ற’ தென்றே
ஐயமுற் றவளைப் பார்த்தேன்.