வண்டுகொண் டுண்டு வக்க
வழங்கும்செங் கமலந் தன்னை
நண்டுகொண் டுண்ட வாறய்
நைந்திடச் செய்தேன் ; நாளை ,
கண்டுகொண் டுண்டு வக்கும்
காரிகை கண்க லங்கின்,
விண்டுகொண் டுண்டு றங்கா
வேதனை விளைவிக் கும்மே !
முன்பனி மூடல் போலென்
முகத்தினைச் சங்கை மூடித்
துன்பெனும் மடுவில் தோய்க்கத்
துயருறும் நிலைகண் டல்லி,
பின்பனி தீர்ந்து, பேணப்
பிறந்தநல் லிளவே னில்போல்,
‘இன்பினுக் கெல்லை யிஃ’தென்
றெனைத்தளிர் விரலால் தீண்டி,
“‘அகங்கோண வைத்தா லாணும்,
அறிவறிந் தடங்கும் பெண்ணும்
முகங்கோண வைப்பா’ ளென்னும்
முதுமொழி முறையோ ராதிர் !
இகங்காணும் பெண்மை யாண்மை
யிருமைமற் றேருமை யாகிச்
சுகங்காண வேண்டு மன்றே ?
‘பூரிக்க வந்து போகும்
பொழுதெ’ன நம்பிப் போந்தும்
கீரிக்கும் பாம்புக் கும்தாம்
கிட்டிய பொழுதா யிற்றே !
ஊருக்குப் பொதுவா யுள்ள
ஒழுக்கத்தை யொட்டி, நீரிக்
கோரிக்கை தீர்த்தால் தான்நும்
குறைதீரக் கூடு” மென்றுள்.
பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/79
Appearance
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை