77
22. உசுப்பி விடல்
‘ஆலொன்று மறுகொன் றும் மற்
றருகரு கிருந்திங் கந்நாள்
நூலென்று நுவன்ற யாவும்
நுணுகியாய்ந் துணர்ந்து நோற்கப்
பாலொன்றித் தேன்க கலந்த
பான்மையாய்ப் பரவ சித்து
மேலொன்றி நாளும் பேசும்
மேதையாய் மிளிர்ந்த தாம்புல் !
வல்லவன் மனத்தில் பொல்லா
வஞ்சனை, வளர்ந்து விட்டால்,
கொல்லுவோன் கையிற் கொண்ட
கோடரி யதுவா மன்றே ?
சொல்லுவான் சொர்க்கத் துக்கே
சொந்தக்கா ரன்தா னென்றே;
நல்லவற் கிவனல் லாமல்
நஞ்சுவே றவ துண்டோ ?
ஆய்வூக மாற்றல் போன்ற
தனைத்தையு மகத்திற் கொண்டாங்
கோய்வாக வொருநாள் மாலை
யுவந்துவந் தொன்றிக் குந்தி,
சாய்வாக இருந்த ஆலின்
சங்கடம் சலிப்பைச் சார்ந்து,
வாய்வேக மாகச் சொற்கள்
வயணமாய் வழங்கிற் றம்புல்:
“மயிலுக்கு மனையு மானய்!
மங்கல வாழ்த்தி சைக்கும்
குயிலுக்குக் குடிலு மானய்!
குரங்குகள், கும்மி கொட்டிப்
பயிலற்கு மேடை யானய் !
பருதிகாய் கின்ற போது,
வெயிலுக்கு நிழலு மானய்
வித்தக வாழ்வுன் வாழ்வே !
” ’