பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78

முதலைவாய் முன்கால் மீட்க
முடியாத யானை, மொய்த்த
சிதலைவாய்த் துரும்பாய் நொந்து
செயல்மாய்ந்து கூவத் தீர்த்த
மிதிலைவாய்ச் சீதை கேள்வன்,
மேனள்மற் றன,— மென்மைக்
குதலைவாய்க் குழவி தூங்கக்
கொண்டதுன் னிலைதா னன்றே ?

பண்டைநா ளரசர், பற்றிப்
பகைவரைப் பணிய வைக்கத்
தண்டெடுத் தியக்கி வந்தால்
தங்குதற் கிடம்நீ தந்தாய்!
உண்டதுன் இலையில் ! ஒய்ந்தோ
ருவந்ததுன் நிழலி லென்று
கண்டுநான் கற்ற பண்டைக்
காவியம் புகழ்வ துன்னை !

முற்பிறப் பதில்முள் மேனி
முசுட்டையா யுதித்தாய் ! மூவாத்
தற்பரன் தயவால் தான்நீ
தரணியிற் பிறந்தா லானய்!
கற்பினுக் கரசி யாமக்
காந்தாரி கண்ட வாழ்வாய்ப்
பற்பல விதத்துன் வாழ்வு
பதிசுக வாழ்வா. யிற்று !

ஆயினு மென்ன மின்னும்
அதிகமா யுளதுன் னயுள் !
‘தேயினும் சந்த னக்கோல்,
தெய்வத்தின் தேவை தீர்த்து
மாயினும், சுவர்க்கம் காணும்
மகத்தான வாழ்வா’ மென்று
தாயினும் பரிவு கூர்ந்து
தாபத ருபதே சித்தார் !