79
மரமாகி யிருந்தும் மண்ணில்,
மதித்திடும் வயிரம் பற்றி
யுரமாக ,— வுள்ளீ டொட்டா
வொருகுறை யுனக்குண் டொப்புத்
தரமாக மாற வேண்டின்
தவம்செய்க ! தாழ்த்தேல் காலம் !
வரமாக வழங்கும் தெய்வம்
வலுவைவா யாற வாழ்த்தி ! ...”
அறுகம்புல் முடித்த சொல்லிஃ
“தாலே ! நீ அவஞ்செய் யாதே !
விறகொடு சுள்ள லாகி,—
வெறுக்கவீ ணக்கி யுன்னை !
‘குறுகிக்கை கூப்பிக் கோரிக்
கும்பிட்டுத் தெய்வம் கொண்டால்
மறுகவே நேரா’ தென்று
மறைகளும் கூறிற்” றென்றே.
“‘அவமாயிற் றந்தோ ! இந்த
அவனிவாழ் வெ’ன்று நைந்து,
‘தவமாகச் செய்திங் கென்னைத்
தமிழாய்ந்த தக்கோர் போற்றச்
சிவமாகிச் சிறப்ப தன்றிச்
சிறுமையைப் பொறுக்கேன் புல்லே !
நவமாதற் குரிய தெல்லாம்
நவிலுக !” என்ற தன்றல் !
“உன்னையு மென்னை யும்மற்
றுளமாரப் பேரைக் கூறி,
‘யின்னதைப் போல்த ழைத்தே,
யின்னதைப் போல்வே ரோடி
மன்னியே வாழ்க வென்று
மங்கல வாழ்த்தி சைப்போன்,
தன்னதைத் தானே ராமல்
தயங்கிடும் மனிதன் தானே !