88
________________
கொன்றையின் கதையும் மற்றிக்
குவலய மறியா தாங்கொல்!
அன்றென்ன வாழ்ந்த திந்த
அறுபதுங் கழிந்தின் றென்ன?
ஒன்றியே குறளைக் கற்றஃ
தொழுகிய நாளொன் றுண்டோ?
மன்றினில் நின்றென் கூற்றை
மறுக்கட்டும், பார்க்கின்றேன் நான்!
மனம்மிக அமைதி யாகி
மகிழ்ச்சிமன் னுதலை வேண்டின்
சினம்மிகக் கூடா' தென்பர்
சிறந்தவர்; செயல்சி றந்திங்
கினம்மிக இன்ப மெய்தற்
கினியநற் றவம்நீ செய்து
கனம்மிகத் தலையும் வாலும்
கண்டுவந் தேன்நீ காணாய்!
ஏரும்பா ராதி ருந்தங்
கீசன்பே ரருளா லிந்தப்
பாரும்பா ராது, பார்த்தே
பசுவின்வாய்ப் புகுந்து பம்பித்
தூரம்பா ராது போய்நான்
துறவறத் தொடக்கங் கண்டு
நேரம்பா ராது வந்தேன்,
நினைத்துனை, யென்ற தாம்புல்,
இச்சொலைக் கேட்கக் கேட்க
இறும்பூதுற் றிதயம் விம்மி, *
'நச்சிலை வேல்கண் நங்கை
நகை' யெனக் 'கலக லெ'ன்று
பச்சிலை சலச லக்கப்
பகைமைபோய்ப் பணிவாய்ப் பைய
எச்சிலை யொழுக்கிப் புல்லே!
இயம்பியம் பெ'ன்ற தவ்வால்.